ஜெயலலிதாவுக்கு சிவாஜி மீது வெறுப்பா? சிவாஜி குறித்து ஆய்வு செய்தவர் கொடுத்த தகவல்..!

Published:

சிவாஜியுடன் ஒரு சில திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்திருந்தாலும் பின்னாளில் அரசியலுக்கு வந்த பின்னர், முதல்வர் ஆன பின்னர் சிவாஜி மீது வெறுப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது முழுக்க முழுக்க பொய் என சிவாஜியை ஆய்வு சிவாஜி பற்றி ஆய்வாளர் டாக்டர் மருது மோகன் தெரிவித்துள்ளார்.

சிவாஜியின் நடிப்பு மீது ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது அரசியல் நகர்வுகள் ஜெயலலிதாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது.

அஜித் விஜய்க்கு இணையான புகழ்.. 2 படங்களை மிஸ் செய்ததால் படுவீழ்ச்சியடைந்த அப்பாஸ்..!

குறிப்பாக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என கடந்த 1989 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது ஜானகி அணிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் சிவாஜி கணேசன் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன் பிறகு தான் அவர் அரசியலே வேண்டாம் என்று கிட்டத்தட்ட ஒதுங்கி விட்டார்.

sivaji jayalalitha2

தனக்கு எதிரான ஒரு அணியில் சிவாஜி கணேசன் சேர்ந்ததால் அவர் மீது ஜெயலலிதா அதிருப்தியில் இருந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் மீது மரியாதை மற்றும் அன்பு எப்போதும் போல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜெயலலிதா, சுதாகரன் என்பவரை தத்தெடுத்த போது அவருக்கு திருமணம் செய்து வைக்க சிவாஜி குடும்பத்திலிருந்து பெண் கேட்கப்பட்டது. சிவாஜி குடும்பத்தினருக்கு இதில் சிறிதுகூட உடன்பாடு இல்லை என்றும் ஆனால் வேறு வழியில்லாமல் சுதாகரனுக்கு தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

19 வயதில் சினிமா எண்ட்ரி.. 20 வயதில் காதல்.. 12 வயது மூத்தவரை திருமணம் செய்த நஸ்ரியா…!

இந்த விஷயத்திலும் சிவாஜி மீது ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டியது ஜெயலலிதா காலத்தில் தான் என்பதும் அவருக்கு பெருமை சேருக்கும் வகையில் செவாலியே சிவாஜி என்று ஒரு சாலைக்கு பெயர் வைத்தது ஜெயலலிதா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sivaji jayalalitha1

மேலும் சிவாஜியின் நடிப்பு குறித்தும் பலர் பலவிதமாக விமர்சனம் செய்வார்கள். அவர் ஓவர் ஆக்டிங் செய்பவர் என்று கூறப்பட்ட நிலையில் நடிக்கவே தெரியாதவர்கள் தான் தன்னை ஓவர் ஆக்டிங் செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள் என பதிலடி கொடுத்திருந்தார்.

அதேபோல் அவர் எந்த படத்திலும் வசனத்தை ரிகர்சல் பார்க்க மாட்டார். ஒன்றுக்கு பத்து முறை தான் பேச வேண்டிய வசனத்தை இன்னொருவரை பேசச் சொல்வார். அவர் பேசும் போது அந்த வசனத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டு அதன் பிறகு அவர் பேசுவார்.

குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய வசனத்தை அவர் 10 முறை ஒரு நபரை பேச வைத்து அதன் பிறகு அவர் ஒரே டேக்கில் அந்த வசனத்தை பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு போட்டியாக எம்ஜிஆர் வளர்த்த நடிகை.. திடீரென திவாலானதால் திருப்பம்..!

மொத்தத்தில் சிவாஜி கணேசன் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் அரசியலில் அவர் மிகப்பெரிய ஜீரோவாக தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...