எந்த கட்சியிலாவது ஒரு இளைஞர் தலைவராக இருக்கின்றாரா? எந்த கட்சியாவது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழா எடுத்ததா? விஜய் சரியாக பேஸ்மெண்ட் போட்டார்.. இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் என்பதை புரிந்து கொண்டார்.. அதனால் 10, 12 வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு விழா எடுத்தார். அவரது ஒவ்வொரு நகர்வும் இளைஞர்களை நோக்கியே.. ஒரு இளைஞர் ஓட்டு கூட வேறு கட்சிக்கு செல்லாது.. அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டுவிட்டார் விஜய்..!டிசம்பர் 29, 2025, 21:15
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கலாம்.. ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் தேட முயல்வார்கள்.. ஜெயிக்கும் வரை பொறுமை காப்பார்கள்.. ஜெயித்த பின் வேலையை காண்பிப்பார்கள்.. அப்படியே ஆட்சி அமைத்தாலும் ஊழலில் ஊறிப்போன சிஸ்டத்தை சரி செய்வது சவாலான காரியம்.. ரஜினி இதை எண்ணி தான் ஒதுங்கி போய்விட்டார்.. ஒருவர் மட்டும் நல்லவராக இருப்பது அரசியலுக்கு போதாது.. ஒரு புரட்சி உண்டானால் மட்டுமே மாற்றம் வரும்..!டிசம்பர் 29, 2025, 19:10
கடைசி நேரத்தில் விஜய் சோர்ந்துவிடுவார்.. விஜய் கட்சியில் சில எம்.எல்.ஏக்கள் ஜெயித்தாலும் விலை போய்விடுவார்கள்.. அரசியல் என்பது துரோகங்கள் நிறைந்தது.. விஜய்யால் துரோகத்தை தாங்க முடியாது.. அரசியலே வேண்டாமென ஒதுங்கி போய்விட வாய்ப்பு அதிகம்.. அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை திராவிட கட்சிகள் வளரவிடாது.. தமிழக அரசியலின் வரலாறு அப்படி? அதையும் மீறி பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவாரா விஜய்?டிசம்பர் 29, 2025, 18:55
தவெக + காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் திமுக வேற ரூட்டில் போகும்.. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கட்சியுடன் விஜய் கூட்டணி என பிரச்சாரம் மாறும்.. இது விஜய்க்கு சிக்கல்.. ஓபிஎஸ், டிடிவியை சேர்த்தால் இருவரின் ஊழல்கள் பிரச்சாரம் செய்யப்படும்.. அதற்கும் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்.. அதற்கு தான் தனித்து போட்டி முடிவை எடுத்த விஜய்.. அதிகபட்சம் தற்குறி என்ற விமர்சனம் மட்டுமே வைக்க முடியும்.. தேர்தல் முடிவு வந்தவுடன் உண்மையான தற்குறி யார் என்பது தெரிந்துவிடும்..!டிசம்பர் 29, 2025, 14:29
விஜய் வரவால் அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறல்? வாக்குச்சிதறல்கள் எந்தெந்த மாவட்டங்களில் அதிகமாக இருக்கக்கூடும்? விஜய் வகுத்துள்ள ரகசியத் தேர்தல் வியூகம் என்ன? 2 பெரிய கட்சிகளையும் எந்த தைரியத்தில் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்.. மத்திய அரசை எதிர்க்கும் துணிவு எப்படி ஏற்பட்டது? விஜய் பின்னால் இருக்கும் பவர் சென்டர் என்ன?டிசம்பர் 29, 2025, 07:59
2021ல் திமுக வெற்றி பெற்றதற்கு விஜய் ரசிகர்களின் 10% ஓட்டு தான் காரணம்.. கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து விஜய் ஓட்டு போட்டதால் ரசிகர்களும் திமுகவுக்கு போட்டிருப்பார்கள்.. அந்த 10% ஓட்டை கழித்தால் திமுக கூட்டணிக்கு சிக்கல்.. திமுகவின் கோர் ஓட்டுக்கள் விஜய்யால் பெரும் இழப்பு.. முதல்முறையாக கணிக்க முடியாத தேர்தல்.. கருத்துக்கணிப்பு நிபுணர்களுக்கே குழப்பம்..டிசம்பர் 28, 2025, 18:30
விஜய்யால் ஜெயிக்கவும் முடியாது.. விஜய்யால் ஆட்சி அமைக்கவும் முடியாது.. திமுக, அதிமுக ஆட்சி அமைப்பதை தடுக்க மட்டுமே முடியும்.. 2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டசபை தான்.. ஒருவேளை மீண்டும் தேர்தல் வந்தால் அதிமுக அல்லது திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!டிசம்பர் 28, 2025, 14:54
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுகிறதா? சென்னையில் சிபிஐ அலுவலகம் இருக்கும்போது டெல்லிக்கு வர ஏன் சம்மன்? தற்செயலா? அல்லது அரசியல் அழுத்தம் கொடுக்கவா? குழப்பத்தில் தவெக நிர்வாகிகள்..!டிசம்பர் 28, 2025, 14:34
விஜய்யால் மலேசியாவே அதிருது.. தமிழ்நாடு அதிராதா? சிவாஜி முதல் கமல் வரை சினிமாக்காரர்கள் அரசியலில் தோற்றதால் விஜய்யை எல்லோரும் சாதாரணமாக எடை போடுகிறார்கள்.. ரிசல்ட் வந்த பின்னர் தான் தெரியும் விஜய் யாரென்று.. விஜய் அரசியலுக்கு வந்தது சரியான நேரம்.. எழுதி வைத்து கொள்ளுங்கள்.. இனிவரும் 25 வருடங்கள் விஜய் ஆட்சி தான்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!டிசம்பர் 28, 2025, 11:15
விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்! பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை!!டிசம்பர் 27, 2025, 21:24