விருச்சிகம் ஜூன் மாத ராசி பலன் 2023!

Published:

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில் சுக்கிரனும்- செவ்வாயும் இணைந்து 9 ஆம் இடத்தில் அமர்வு செய்துள்ளனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ரிஷபத்தில் இருக்கும் சூர்யனின் பார்வை விருச்சிகத்தின் மீது விழுகின்றது.

நீங்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலையானது கிடைக்கப் பெறும். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். எதிர்ப்புகளைத் தாண்டி போராடி எடுத்த காரியத்தினை செய்து முடிப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை குரு பார்வை 2 ஆம் இடத்தில் விழுகின்றது. இதனால் எதிர்பார்த்த வரன் கைகூடினாலும் தற்போதைக்குத் திருமண தேதியைக் குறிக்க முடியாது.

தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்ய நினைத்தாலோ அல்லது புதுத் தொழில் செய்ய நினைத்தாலோ பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளுடன் செய்யாதிருத்தல் நல்லது.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் குடும்பத்தாரால் பிரச்சினைகள் குடும்பத்தில் நிலவும். குடும்பம் குறித்த உங்களின் பொறுப்பு அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் பொருளாதாரரீதியாக பணத் தட்டுப்பாடு இருக்கும்; கடன்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இருப்பினும் முடிந்தளவு வீண் செலவுகளைத் தவிர்த்தல் நல்லது.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை ஒரு முடிவினை எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுதல் நல்லது.

மேலும் உங்களுக்காக...