தனுசு ஜூன் மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை சனி பகவானும் சூர்ய பகவானும் உங்களுக்குச் சாதகமாகவே உள்ளனர். புதன் குரு பகவானுடன் இணைந்து ஜூன் 7 ஆம் தேதி வரை ஒன்றாகவே உள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு,…

dhanusu

தனுசு ராசியினைப் பொறுத்தவரை சனி பகவானும் சூர்ய பகவானும் உங்களுக்குச் சாதகமாகவே உள்ளனர். புதன் குரு பகவானுடன் இணைந்து ஜூன் 7 ஆம் தேதி வரை ஒன்றாகவே உள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற விஷயங்களில் ஜூன் முதல் வாரம் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

ஜூன் முதல் மற்றும் கடைசி வாரத்தில் ஆதாயப் பலன்கள் பலவற்றையும் எதிர்பார்க்கலாம். திருமண காரியங்களைப் பொறுத்தவரை சுக்கிரனும் செவ்வாய் பகவானும் இணைந்து 8 ஆம் இடத்தில் இருந்து திருமண ஏற்பாடுகளில் எதிர்ப்புகளை ஏற்படுத்தும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கவும், வீண் பேச்சுகள் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியுடன் மாதத்தினைக் கடந்து செல்லுங்கள்.

உறவினர்களுடன் மன வருத்தங்கள் ஏற்படும். மேலும் உடன் பிறப்புகளுடன் சொத்துரீதியான பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை உங்களின் எதிர்காலம் குறித்த திட்டங்களுக்குச் சாதகமான சூழல் நிலவும்.

உடல் ஆரோக்கியம் ரீதியான விரயச் செலவுகள் ஏற்படும், தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு குறைந்து காணப்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கணவன் வீட்டார் பேசும் விஷயங்களைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்; இதனால் பிரச்சினைகள் குறையும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!