துலாம் ஜூன் மாத ராசி பலன் 2023!

Published:

துலாம் ராசியினைப் பொறுத்தவரை புதன் பகவான் இடப் பெயர்ச்சியாகி ரிஷபத்திற்குச் செல்கிறார். சனி பகவான் வக்ரம் அடைந்துள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை குருவின் பார்வையும் சுக்கிரனின் நகர்வும் ஆதாயப் பலன்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

தொழில் ரீதியாக எடுத்துக் கொண்டால் சுக்கிரன்- செவ்வாய் இணைவு கூட்டுத் தொழில் செய்வோருக்குச் சாதகமானதாக இருக்கும். ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் வேலைசார்ந்த விஷயங்கள் பலவும் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் நிறைந்ததாகக் காணப்படும். பல ஆண்டுகள் பொறுத்துப் போன நீங்கள் எரிமலையாய் வெடிப்பீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் வரன் கைகூடும் காலகட்டமாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை குறிக்கோளுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்ல நினைப்போருக்கு ஜூன் மாதத்தின் இறுதியில் நற்செய்தி கிடைக்கப் பெறும்.

கல்விரீதியாக செலவினங்கள் ஏற்படும்; மேலும் கல்விக் கடன்களை வாங்குவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்; மற்றொருபுறம் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...