கன்னி ஜூன் மாத ராசி பலன் 2023!

Published:

கன்னி ராசியினைப் பொறுத்தவரை புதன் பகவான் ரிஷப ராசிக்குப் இடம் பெயர்கிறார். புதன் பகவானால் கடந்த காலங்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் அது சரியாகும் காலகட்டமாக இருக்கும்.

சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார்; குரு பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புதன்- சுக்கிரனின் ஆதரவால் சாதகப் பலன்களை எதிர்பார்க்கலாம்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை கிரகங்களின் அமைவு பெரிய அளவில் உங்களுக்குச் சாதகமானதாக இல்லை. திருமணத்திற்கான வரனைப் பார்த்து வாருங்கள்; ஆனால் வரன் கைகூடாத பட்சத்தில் அதனைப் பெரிய அளவில் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அவசரப்பட்டு முடிவுகளை எந்தவொரு காரியம் சார்ந்தும் எடுத்துவிட வேண்டாம். மாணவர்களைப் பொறுத்தவரை புதன் பகவானின் இடப் பெயர்வு உங்களுக்குச் சாதகமானதாக இருப்பதால் உங்களின் எதிர்காலம் குறித்த திட்டங்களைச் சிறப்பாகத் தீட்டலாம்.

மேலும் உயர்கல்வி சார்ந்து பெரிய அளவிலான செலவுகளைச் செய்வீர்கள். மேலும் போட்டித் தேர்வுகள், உயர் கல்வி சார்ந்த தேர்வுகள், வேலையில் சேர கோர்ஸ்கள் சேர்தல் என்பது போன்ற விஷயங்கள் ரீதியாக அதிக அளவில் செலவுகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கல்வி சார்ந்த கடன்களை வாங்குவீர்கள். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பணவரவு ஒருபுறம் இருந்தாலும் செலவு அதையும்விட கூடுதலாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன அமைதி இல்லாமல் காணப்படுவர்.

மேலும் உங்களுக்காக...