ரிஷபம் வைகாசி மாத ராசி பலன் 2023!

Published:

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். ரிஷப ராசியினைப் பொறுத்தவரை லக்னத்தில் சூர்ய பகவான் வலுப்பெற்றுள்ளார். தாய்வழி மற்றும் மனைவி சார்ந்த வழிகளில் உங்களுக்குப் பெரிய அளவிலான ஆதாயப் பலன்கள் கிடைக்கப் பெறும்.

ஆளுமைத் திறன் கொண்ட ஒரு நபராக நீங்கள் மாறப் போகிறீர்கள். உங்களின் எண்ணம், செயல் மற்றோருக்கு உதாரணமாக இருப்பதுபோல் செயல்படுவீர்கள்.

நீங்கள் எடுத்த காரியத்தை விடாப்பிடியாய் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். லக்னத்தில் சூர்ய பகவான் வருவதால் கடந்த காலங்களில் இருந்த உடல் குறைபாடுகள் சரியாகும். மிகப் பெரிய அளவிலான உடல் தொந்தரவுகளும், படிப்படியாகக் குறையும்.

மருத்துவம் சார்ந்த விரயச் செலவுகள் குறையும். 3 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் சேர்ந்து இருப்பதால் வண்டி, வாகனங்கள் ரீதியாக மாற்றங்களைச் செய்வீர்கள்.

வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகக் கவனமாகச் செல்லுதல் வேண்டும், இந்த மாதத்தில் வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

முடிந்தளவு இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

தொழில்ரீதியாக யோகம் நிறைந்த மாதமாக இருக்கும், பெண்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியினைக் காண்பீர்கள். பொருளாதாரச் சேர்க்கை சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணனை வழிபட்டு வாருங்கள்.

மேலும் உங்களுக்காக...