மிதுனம் வைகாசி மாத ராசி பலன் 2023!

Published:

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். மிதுன ராசியினைப் பொறுத்தவரை வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு வைகாசி மாதத்தில் அமையப் பெறும். பல ஆண்டுகள் தீராத கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள்; தற்போது அந்தக் கடனை தந்தை அல்லது மாமனார் உதவியால் அடைப்பீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறும். பல ஆண்டுகளாக திருமணம் கைகூடாமல் இருந்தவர்களுக்கும் திருமணம் கைகூடும்.

மேலும் தொழில்சார்ந்து நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களைத் தயங்காமல் செய்யலாம்; நிச்சயம் அது உங்களுக்கு ஆதாயத்தினையே கொடுக்கும்.

சில இடங்களில் நீங்கள் கோபமாகப் பேசுவீர்கள், அது உறவுகளுக்குள் பெரும் பிளவினை ஏற்படுத்தும், முடிந்தளவு வார்த்தை ப்ரயோகத்தில் கவனம் தேவை.

மேலும் வெளியூர்ப் பயணங்களால் ஆதாயப் பலன்கள் ஏற்படும். வீடு, மனை சார்ந்த விஷயங்களை வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். வண்டி, வாகனங்கள் ரீதியாக புதுப்பிப்புச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சேமிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்துவீர்கள், செய்யும் செலவுகள் பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அதிகரிக்கும், பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பொருளாதாரரீதியில் ஏற்றம் நிறைந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கும். விஷ்ணு பகவானை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் மிகச் சிறப்பான மாற்றத்தினைக் காண்பீர்கள்.

மேலும் உங்களுக்காக...