மேஷம் வைகாசி மாத ராசி பலன் 2023!

Published:

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். மேஷ ராசியினைப் பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் பயங்கரமான ராஜயோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

சூர்ய பகவான் 5 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். அதனால் தன ஸ்தானம் வலுப்பெறும். வாக்குரீதியாக மிகவும் நேர்மறையாகப் பேசுவீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் பண வரவு ஏற்படும்.

வீட்டில் பல ஆண்டுகள் கழித்து சுப காரியங்கள் நடந்தேறும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை மிகத் தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். எதிர்காலக் கல்வி குறித்த திட்டங்கள் குறித்த விஷயங்களில் ஆராய்ந்து சிறப்பான முடிவினை எடுப்பீர்கள்.

குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுக்கிரன்- செவ்வாய் இணைவால் உறவினர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும்; அதிலும் குறிப்பாக தாய் வழி ரீதியான நெருங்கிய உறவினர்களைப் பிரிவீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது ஆக்ரோஷப்படாமல் சிறிது நிதானத்துடன் பேசுதல் நல்லது. சொந்த ஊருக்கு குடும்பத்துடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும்.

தொழில்ரீதியாக இருந்த பின்னடைவுகள் சரியாகும். மேலும் புதிதாக வேலை தேடுவோருக்கு சிறப்பான வேலை கிடைக்கப் பெறும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்.

மேலும் உங்களுக்காக...