கடகம் வைகாசி மாத ராசி பலன் 2023!

Published:

மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும். கடக ராசியினைப் பொறுத்தவரை தந்தைவழியால் ஆதாயப் பலன்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள். மேலும் சக பணியாளர்களுடனான உறவில் மேன்மை ஏற்படும்.

நீங்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த பதவி உயர்வு உங்களுக்குக் கிடைக்கப் பெறும். தொழில்ரீதியாக அபிவிருத்தி சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள், கூட்டுத் தொழில் செய்யும் முடிவினை எடுக்கும்போது பல வழிகளிலும் ஆராய்ந்து முடிவு எடுங்கள்.

புதிதாக வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த கனவு வேலை கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை முடிந்தளவு நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

11 ஆம் இடத்தில் சூர்ய பகவான் இருப்பதால் பெரிய அளவிலான எதிர்மறையான விஷயங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை. உங்கள் லக்கினத்தில் சுக்கிரனும் செவ்வாய் பகவானும் இணைந்து உள்ளனர், இதனால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் பெரும் பிளவினை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் கடன்களை அடைத்து கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் வீட்டிற்குத் தேவையான சிறு சிறு பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். பத்ர காளியம்மன் வழிபாடு செய்து வந்தால் நன்மை பயக்கும்.

மேலும் உங்களுக்காக...