மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2023!

Published:

மிதுன ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை புதன் மிதுன ராசியில் உள்ளார்; பொருளாதாரரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவில் தடையில்லை; முடிந்தளவு விறுவிறுவென வரன் பார்க்கும் விஷயத்தில் களம் இறங்குங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும், மேலும் குழந்தை பாக்கியத்துக்காக எதிர்பார்த்து இருப்போருக்கு குழந்தை வரன் கிடைக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பட்ட உடல் தொந்தரவுகளில் இருந்து மீண்டு புத்துணர்வு பெறுவீர்கள். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும்; அவ நம்பிக்கை நீங்கும். மனதளவில் தைரியம் கொண்டு இருப்பதாக உணர்வீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை இதுவரை மந்தநிலையில் இருந்தவர்களும் மிகவும் ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேலும் உயர் கல்விக்காக வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையப் பெறும். மேலும் அதற்கான கடன் உதவிகளும் கிடைக்கப் பெறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த சிரமங்களில் இருந்து மீள்வீர்கள், மேலும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மேலும் உங்களுக்காக...