கடக ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது. தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்; மேலும் தொழிலில் மிகச் சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள்.
அதீத நம்பிக்கையால் சில தடுமாற்றங்களையும், தோல்வியையும் சந்திப்பீர்கள். சுக்கிரனின் பார்வையும் செவ்வாய் பகவானின் பார்வையும் சனி பகவானின் மேல் விழுகின்றது.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
10 ஆம் இடத்தில் குரு பகவான், 12 ஆம் இடத்தில் சூர்ய பகவான் என கிரகங்களின் இட அமைவு உள்ளது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள் கொண்டதாகவே இருக்கும். பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு திருமண வரன் பாருங்கள்.
காதலர்கள் மத்தியில் பிளவு ஏற்படும்; மாணவர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் கல்விரீதியாக மிகத் தெளிவுடன் செயல்படுவர். மேலும் உயர்கல்விரீதியாக எடுக்கும் முடிவுகளை முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டு எடுத்தல் நல்லது.
பொருளாதாரரீதியாக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்; முடிந்தளவு விரயச் செலவுகளைத் தவிர்க்கவும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இரவு நேரப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
வெளியூர்ப் பயணங்கள் உடல் அலைச்சலைக் கொடுக்கும், இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வேலைப்பளு அதிகரிக்கும் மாதமாக இருக்கும்.