ரிஷப ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை தொழில்ரீதியாகச் சாதகமான மாதமாக இது நிச்சயம் இருக்கும்.
மேலும் வேலைவாய்ப்புரீதியாக புது வேலை கிடைக்கப் பெறும்; மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இட மாற்றம் போன்றவற்றிற்காக எதிர்பார்த்து இருப்போருக்கு நினைத்த காரியம் கைகூடும் மாதமாக இருக்கும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
பொருளாதாரரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும்; குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருப்பதால் வரவு வரும் அளவு செலவு மற்றொருபுறம் இருக்கவே செய்யும்.
சுக்கிரன்- செவ்வாய் பகவான் சேர்க்கையால் வீடு, மனை வாங்குவதற்கு ஏற்ற அனுகூலமான மாதமாக இருக்கும். சுபச் செலவுகள் வீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும். திருமண வரன் கைகூடாமல் இவ்வளவு காலம் தள்ளிப் போன நிலையில் இனி விறுவிறுவென திருமண காரியங்கள் நடந்தேறும்.
சொத்துகள் வாங்குவதற்கு ஏற்ற காலமாக இது உங்களுக்கு இருக்கும். வீடு கட்டுதல், புதுப்பித்தல் என்பது போன்ற விஷயங்களில் மும்முரமாகக் களம் இறங்குவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த உடல் நலக் கோளாறுகளும் சரியாகும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
புதிதாக செய்யும் முயற்சிகளில் சிறு சிறு தடுமாற்றங்கள் இருக்கும்; ஆனால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்த காரியத்தினை செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.