ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா? அப்டேட்டால் கொண்டாடும் ரசிகர்கள்!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல மொழிகளில் படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

மேலும் படத்தில் தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்த இந்த படம் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து தற்பொழுது ஒரு வாரம் ஆன நிலையில் இந்த திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் 1000 கோடி வசூலை தொட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியான பல முன்னணி ஹீரோக்களின் படத்தின் வசூலை ஜெயிலர் படம் ஓரம் கட்டியுள்ளது என ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அண்ணாத்த படத்தின் கலவையான விமர்சனத்தை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் மீண்டும் ஒரு பாட்ஷா போல அதிரடியாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 900 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 4000த்திற்கு அதிகமான திரையரங்குகளிலும் வெளியாகி இன்று வரை ஹவுஸ் புள் காட்சிகளாக ஓடி வருகிறது.

நடிகை ரம்யாகிருஷ்ணன் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு அடுத்த படியாக கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் சன் நெஸ்ட், நெட் பிளஸ் என்னும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் தற்பொழுது வரை வெளியாக வில்லை.

ஆனால் ஜெயிலர் திரைப்படம் இந்த ஓடிடி தளங்களில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

 

மேலும் உங்களுக்காக...