மீனம் ஆவணி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

மீன ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை குரு பகவான் ராசிக்கு 2 ஆம் இடத்தில் உள்ளார். பொருளாதாரரீதியாக ஏற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.

உங்கள் சொல்லுக்கு பெரிய மரியாதை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை குடும்பத்தில் நிம்மதி , சந்தோஷம் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் சிறு சிறு செலவுகள் ஏற்பட்டாலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்ர பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பது மிகச் சிறப்பு. எதிரிகளை துவம்சம் செய்து விடுவீர்கள். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் ஏற்கனவே இருந்த உடல் தொந்தரவுகள் சரியாகும்.

தொழில்ரீதியாக அரசு சார்ந்த கடனுதவிகள், மானியம் கிடைக்கும். கூட்டுத் தொழில் உங்களுக்கு ஏற்றத்தினைக் கொடுக்கும். மேலும் கடன் வாங்கியாவது தொழிலை அபிவிருத்தி செய்யுங்கள்; லாபம் கொழிக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மிகவும் ஆர்வத்துடன் படிப்பர். தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள்; ஆனால் தளராமால் புது வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும். சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகள்ரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும்; தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

மேலும் உங்களுக்காக...