கும்ப ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை சனி பகவான் ராசியில் வக்ரகதியில் உள்ளார். குரு பகவான் மற்றும் சூர்ய பகவானின் இட அமைவு அனுகூலப் பலன்களையே கொடுக்கும்.
சனி பகவானின் தாக்கம் மாணவர்களை நோக்கியதாகவே இருக்கும்; மாணவர்கள் பெரிய அளவில் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பர். மேலும் தேவையற்ற நட்பு வட்டாரம் ஏற்படும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
குழந்தைகள் பெரியோர்கள் சொல்வதைக் கேட்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வர். பிள்ளைகளால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். உடன் பிறப்புகளுடன் பணம் கொடுக்கல், வாங்கலில் மனக் கசப்புகள் ஏற்படும்.
பொருளாதாரரீதியாக சிறு மந்தநிலை இருக்கும்; மேலும் கடன் சுமை உங்களுக்கு மன உளைச்சலைக் கொடுப்பதாய் இருக்கும். வீடு கட்டி வந்தோர் பொருளாதாரக் குறைவால் வீட்டினைப் பாதியில் போட்டு வைப்பர்.
மேலும் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை, மருத்துவச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் இருந்தநிலையில் தற்போது மீண்டும் தன்னம்பிக்கையுடன் முயற்சிப்பீர்கள்.
திருமண காரியங்களில் இழுபறி நீடிக்கும். கைகூடும் நிலையில் இருந்த வரன்களும் தட்டிப் போகும். வண்டி, வாகனங்கள் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும்.