ரஜினியை வரவேண்டாம் என கூறிய சென்சார் அதிகாரி.. கமல்ஹாசனிடமும் வாக்குவாதம்.. யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி..!

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு திரைப்படமும் சென்சார் ஆகும்போது சென்சார் அதிகாரிகளை சந்தித்து வணக்கம் செலுத்துவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படத்தை பார்க்க சென்சார் அதிகாரிகள் வந்திருந்த போது அதிலிருந்த சென்சார் அதிகாரி ஒருவர் ரஜினி வர வேண்டாம் என்று கூறினார்.

ஒரு படத்தை பார்ப்பதற்கு முன்பாக அந்த படத்தின் ஹீரோ வந்து வணக்கம் செலுத்தினால் அது நன்றாக இருக்காது என்றும் படம் பார்த்தபின் அவர் தாராளமாக என்னை சந்திக்கலாம் என்றும் கூறினார். அவர்தான் ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன். இவர் பின்னாளில் ‘மோகமுள்’ உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் என்ற நாவல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தை ஞான ராஜசேகரன் என்ற ஐஏஎஸ் அதிகாரி திரைப்படமாக உருவாக்கினார். இந்த படத்திற்காக அவர் பல ஆய்வுகள் செய்தார். அதன் பிறகு தான் இந்த படத்தை இயக்கினார்.

mogamul

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது இந்த படத்தை அவர் இயக்கியதால் அவர் விடுமுறை எடுத்து இந்த படத்தை இயக்கினார். இந்த படம் மிகவும் மெதுவாக ஓடும் படமாக இருந்தாலும் இந்த நாவலின் மதிப்பை தெரிந்து கொண்ட ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர்.

ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரனுக்கு சென்சார் அலுவலகத்தில் வேலைபார்த்த அனுபவம் இருந்ததால், பல திரைப்படங்களைப் பார்த்த அனுபவத்தில் அவர் சில அற்புதமான படங்களை இயக்கினார். ஒரு வருடத்திற்கு குறைந்தது 300 படங்களை அவர் சென்சார் செய்ததாகவும் கூறப்பட்டது.

சென்சார் செய்யுமபோது அவர் பாகுபாடின்றி இருப்பார். பெரிய நடிகர்களின் படங்கள், சின்ன நடிகர்களின் படங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தன் மனதில் பட்டதை செய்வார். அதனால் அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த கமல்ஹாசன் குடும்பம்.. மொத்தம் எத்தனை விருதுகள் தெரியுமா?

கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தின் தணிக்கையின்போது 15க்கும் மேற்பட்ட காட்சிகளை ஞானசேகரன் வெட்டினார். கமல்ஹாசன் இதனால் கடும் கோபம் அடைந்தார். ஒரு கணவன் மனைவி யதார்த்தமாக செய்யும் விஷயங்களை சினிமாவில் காட்டினால் நீங்கள் ஏன் தடுக்குறீர்கள்? ஒரு இயல்பான சினிமா உருவாவதை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.

Heyram 2
Heyram

ஒரு கணவன் மனைவியிடையே நடப்பது உண்மைதான். ஆனால் சென்சார் குழுவின் வேலை அது உண்மையா? இல்லையா? என்பதை ஆய்வது அல்ல. நீங்கள் சொல்கிற விஷயம் மக்கள் அரங்கில் வெளியிடக்கூடிய தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது தான் எனது வேலை. ஒரு பொதுவான இடத்தில் இது போன்ற காட்சிகளை அனுமதிக்க முடியாது என்று கமல்ஹாசனுக்கு அவர் பதில் அளித்தார்.

அதேபோல் ‘ஹே ராம்’ திரைப்படத்தில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படும் காட்சியில் தரையில் இருந்து தூக்கி எறியப்பட்டு காந்தி கீழே விழுவார். ஒரு தேச பிதாவை இப்படியா காட்டுவது என தணிக்க குழுவில் இருந்த சிலர் ஆவேசமாக கேட்டனர். ஏதோ ஒரு மிருகத்தை சுடுவது போல் கேவலமாக காட்டியிருக்கிறார்கள். காந்தி என்ற ஆங்கில திரைப்படத்தில் இந்த காட்சியை எவ்வளவு நாகரிகமாக எடுத்து இருப்பார்கள் என்று மற்ற சென்சார் அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அந்த காட்சியை வெட்ட முடியாது என்று ஞான ராஜசேகரன் தான் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இருந்தார். கமல்ஹாசன் இந்த காட்சிக்காக இங்கிலாந்து சென்று கோட்சே சுட்ட அதே வகை துப்பாக்கி வாங்கிக் கொண்டு வந்து படம் எடுத்திருப்பார். இந்த துப்பாக்கியால் சுட்டால் உண்மையில் சுடப்படுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஞான ராஜசேகரன் அந்த காட்சியை அனுமதித்தார்.

baasha3

ரஜினிகாந்த் அவரது ஒவ்வொரு திரைப்படத்தின் சென்சாரின் போதும் சென்சார் அதிகாரிகளை நேரில் பார்த்து வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவது வழக்கமாம். அந்த வகையில் ‘பாட்ஷா’ திரைப்படம் சென்சார் செய்யப்படுவதற்கு முன்பாக, ரஜினிகாந்த் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார், உங்களை பார்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்று படக்குழுவினர் கூறினர். அப்போது ஞான ராஜசேகரன், ‘தயவுசெய்து அவரை இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள், இது ஒரு தவறான அணுகுமுறை, இதுபோல் மற்ற எந்த நடிகரும் செய்வதில்லை. நான் அவரை பார்த்த பிறகு படத்தை பார்த்தால் எனக்கு படத்தை பாசிட்டிவாக தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.’ என்று கூறினார்.

இதனை அடுத்து ரஜினிகாந்த் தியேட்டருக்கு வந்து அதன் பின் திரும்பி விட்டதாக கூறப்பட்டது. ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களையும் ஞான ராஜசேகரன் தான் சென்சார் செய்தார். அவர் சென்சார் செய்கிறார் என்றால் அவர் சொல்லும் கட்களை ஏற்றுக் கொள்ளுங்கள், வாதம் செய்ய வேண்டாம் என்று ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்பட்டது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

சென்சாரில் அதிகாரியாக இருந்த ஞான ராஜசேகரன் மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் பாரதி திரைப்படமும் பெரியார் திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது. பாரதியாரை அப்படியே கண்முன் பார்த்தது போல் அந்த படத்தை ஞான ராஜசேகரன் இயக்கியிருப்பார். பாரதியாரை குறித்து பல ஆய்வுகள் செய்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...