மகரம் ஆவணி மாத ராசி பலன் 2023!

Published:

மகர ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். 4 ஆம் இடத்தினை செவ்வாய் பகவான் பார்ப்பதால் இடம் வாங்குதல், இடம் விற்றல் என்பது போன்ற விஷயங்கள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

சுபச் செலவுகள் வீட்டில் ஏற்படும். குருபகவான் 10ஆம் இடத்தினைப் பார்ப்பதால் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கும் திறமைக்கேற்ற எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கப் பெறும். சமூகத்தில் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து உயரும், சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாடு செல்ல பல ஆண்டுகளாக முயற்சித்தோருக்கு உங்களின் கனவு நனவாகும் மாதமாக இது இருக்கும் என்றே சொல்லலாம்.

பணவரவு தாராளமாக இருக்கும்; மற்றொருபுறம் செலவினங்கள் அதிகரிக்கும், வீண் செலவுகளைத் தவிர்த்து ஆதாயச் செலவுகளாகச் செய்து விடுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தந்தையின் உடல் நலனில் எச்சரிக்கை தேவை. உடல் ரீதியாக இருந்த தொந்தரவுகள் அதிகரிக்கும்; சிறு சிறு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள் பெரும் பிரச்சினைகளாக மாறும்.

மூன்றாம் நபர்களின் தலையீட்டைக் குடும்பத்தில் தவிர்க்கவும்.

மேலும் உங்களுக்காக...