கும்பம் ஆனி மாத ராசி பலன் 2023!

Published:

கும்ப ராசி அன்பர்களே! உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை உடல் நலக் கோளாறுகள் இருந்துகொண்டே இருக்கும்.

முறையான உடற்பயிற்சி செய்துவருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளின் விஷயத்தில் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலைவாய்ப்பானது கிடைக்காது; கிடைக்கும் வேலையினை தற்போதைக்குச் செய்யவும். மேலும் இருக்கும் வேலையினைவிட்டு புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நல்லது.

மேல் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில்ரீதியாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை திருமணம் தள்ளிப் போன நிலையில் இனி திருமணம் கைகூடி வரும். மேலும் விறுவிறுவென திருமண தேதி குறித்தல், நிச்சயதார்த்தம் என வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும்.

குடும்பத்தோடு வெளியூர் சென்று வருவீர்கள், கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்காதீர்கள், மேலும் கடன் வாங்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துக் கடன் வாங்குதல் வேண்டும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...