மீனம் ஆனி மாத ராசி பலன் 2023!

Published:

மீன ராசி அன்பர்களே! யோக பலன் நிறைந்த மாதமாக ஆனிமாதம் இருக்கும். எதிர்பார்த்திராத நற் செய்தி உங்களைத் தேடிவரும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் கிடைக்கப் பெறும்.

உடன் பிறப்புகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்; இல்லையேல் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். கடன் தொல்லையில் இருந்து ஓரளவு மீள்வீர்கள்; பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

ஆனால் இருக்கும் பணத்தைச் செலவழித்து ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் சிறிது மந்தநிலை காணப்படும். மிகப் பெரிய மாற்றங்கள் நிறைந்ததாக உங்கள் வாழ்க்கை இருக்கும்.

திடீர் ராஜயோகத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், வீடு, மனை போன்றவை உங்கள் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையப் பெறும். வண்டி வாகனம் வாங்குதல், புதுப்பித்தல் போன்ற விஷயங்களைச் செய்வீர்கள். மேலும் பிரிந்த உறவினர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்று சேர்வர்.

பூர்விகச் சொத்துகள் ரீதியான கோர்ட் வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பானது கிடைக்கப் பெறும். இல்லத்தரசிகள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...