மகர ராசி அன்பர்களே! குடும்பத்தில் சிறு சிறு நெருடல்கள், பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும்; முடிந்தளவு வீண் பேச்சுகளைத் தவிர்த்தல் நல்லது.
மேலும் குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடத்துச் சொல்லாமல் தங்களுக்குள்ளேயே பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுதல் நல்லது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நல்லது.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் பெரிய அளவிலான மாற்றங்கள் எதையும் செய்யாமல் இருத்தல் நல்லது. உடன்பிறப்புகளுடனான அன்பு அதிகரிக்கும், பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சரியாகும்.
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்; எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில்ரீதியாக அரசு மானியம்/ கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். உள்ளூர்ப் பயணங்கள்/ வெளியூர்ப் பயணங்கள் என அலைச்சல் மிகுந்ததாக ஆனி மாதம் இருக்கும்.
மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி ரீதியாக எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் பெரிய அளவில் தொந்தரவுகள் இருக்காது. பெரிய அளவிலான உடல் குறைபாடுகளும் படிப்படியாகக் குறையும்.