முருகனுடைய விரதங்களில் 3 பலருக்கும் தெரிந்தது. அதாவது, வார விரதம், திதி விரதம், நட்சத்திர விரதம்.
வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமையில் இருக்கக்கூடிய விரதம். செவ்வாய் என்ற ஆதிக்கத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமான். அதனால செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்து வேண்டி வழிபட்டால் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
நீண்டநாளாக இருந்த திருமணத்தடை நீங்கும். குழந்தைப் பேறு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடன் ரொம்ப நாளாக இருக்கு. அதுல இருந்து மீள முடியல என்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால் நிச்சயமாகக் கடன் பிரச்சனை தீரும்.
செவ்வாய் தோஷத்தால் கஷ்டப்படுபவர்களும் இந்த விரதம் இருக்கலாம். செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தலைவனான முருகப்பெருமானை சரணடைந்து விட்டால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். அடுத்து முருகனுக்கு உண்டான திதிகளில் எது சிறப்பான நாளோ அது திதி விரதம்.
சஷ்டி திதி தான் அது. சஷ்டியில் விரதம் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். ரொம்ப ஆற்றல் நிறைந்த விரதம் இது. வளர்பிறை, தேய்பிறைன்னு எதுவாக இருந்தாலும் மாத சஷ்டி விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். நட்சத்திர விரதம் என்றால் முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய விரதம். பரணியிலேயே விரதத்தை ஆரம்பித்து கார்த்திகையில் நிறைவு செய்தால் மிக உன்னதமான பலன்கள் கிடைக்கும். உயர் பதவி கிட்டும்.
மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



