நடிகராக இருந்து அரசியலில் காலடி எடுத்து வைத்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வராகவும் மாறியுள்ளார். இரண்டு முதல் ஐந்து தொகுதிகள் வரை தான் விஜய்யின் தவெக கட்சி வெல்லும் என்று பலரும் கருதினர். ஆனால் அதையெல்லாம் உடைத்து எறிந்த விஜய், 107 தொகுதிகள் வென்று தற்போது கூட்டணி கட்சிகள் உதவியுடன் முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஆட்சி வரையில் சட்டசபை நிகழ்வுகளை இளைஞர்கள் பெரிதும் பார்க்காமல் இருந்து வந்தனர். ஆனால் முதல்வராக விஜய் சட்டசபையில் நுழைந்த பின்னர், சட்டசபைக்குள் என்ன நடக்கிறது, சபாநாயகர் யார் எதிர்க்கட்சியினர் எப்படி பேசுவார்கள் என பல விஷயங்களை இளைஞர்கள் நுண்ணிப்பாக கவனித்து வருகின்றனர். அதேபோல விஜய் முதல்வராக பொறுப்பேற்றதும் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் இது போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் அவர் தனது குழுவினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
புதிதாக வெடித்த பூகம்பம்..
இப்படி முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னர் தொடர்ந்து சிக்ஸர்களை அடித்துக் கொண்டிருந்த விஜய் தனது ஜோதிடரான ரத்தன் பண்டித் என்பவருக்கு அரசு பொறுப்பு கொடுத்தது தான் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல அதிமுக அரசு இரண்டாகப் பிளவு ஏற்பட்டிருக்க, அதில் இரண்டாவது அணியை முதல்வர் போய் சந்தித்ததும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல் காலம் தாழ்த்தியதும் அதிக சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதே போல எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு விமர்சனங்களை ஆளுங்கட்சியின் மீது வைத்திருந்தார். இதில் ஒரு சில விஷயங்களுக்கு தனது பதிலடி கருத்துக்க முதல்வர் விஜய் அவர்கள் சட்டசபையில் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அதிமுகவினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டது, திமுகவினர் வெளிநடப்பு செய்தது என பல்வேறு நிகழ்வுகள் சட்டசபையில் அதிக கவனம் பெற்றிருந்தது.
இதற்கு மத்தியில் தான் உதயநிதி ஸ்டாலின் எதிர்கால கட்சித் தலைவராக தவெக மற்றும் முதல்வர் விஜய் மீது வைத்த விமர்சனத்திற்கு சட்டசபையில் பதில் சொல்லாமல் சுமார் ஆறு மணி நேரம் கழித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார் முதல்வர் விஜய். பக்கம் பக்கமாக திமுக மீதும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முந்தைய அரசின் நடவடிக்கைகள் மீதும் நிறை விமர்சனங்களை விஜய் வைத்திருந்தார்.
இது ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்ற அதே வேளையில் தான் சட்டசபையில் இருந்த போது உதயநிதி ஸ்டாலின் அத்தனை நேரம் பேசிய சமயத்தில் அதற்கு ஒரு பதிலடி கொடுக்காமல் பல மணிநேரம் கழித்து ஏன் சமூக வலைதளங்கள் மூலம் தனது பதிலை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் விஜய் மீது விமர்சனங்கள் எழாமலும் இல்லை.
விஜய் அதை மாத்திக்கணும்..
ஒருவேளை அரசியல் அனுபவமின்மை குறைவு என்பதால் விஜய் சட்டசபையில் இது பற்றி அதிகம் பேசாமல் சமூகவலைத்தளங்களில் பின்னர் பதில் சொல்வதாகவும் சிலர் ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வரும் நாட்களில் இது போன்ற அரசியல் கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் தனது கருத்தை நேரடியாக பேசுவது தான் ஒரு முதல்வராக விஜய்க்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும் என்றும் சமூக வலைதளத்தில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் வைத்த கருத்துக்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட விஜய் அவர்கள் அதற்கு பதில் சொல்லும் போதும் மிகத் தயாராக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆதரவாளர்களும், ஓட்டு போட்டவர்களின் கருத்தாகவும் உள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

