இறைவனிடம் ஞானசம்பந்தர் கேட்ட கேள்வி…! அடுத்த நொடியே கிடைத்த அற்புத பதில்!

எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா…

எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் இன்னைக்கு எல்லாரும் அதிகமா பயன்படுத்துறாங்க. அதிலும் அப்படித்தான். நமக்கு என்ன தேவை? எது தேவை? எப்போ தேவை? மொபைல்ல எப்போ பார்க்கணும்னு தெரியணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டா தான் நம்மோட வாழ்க்கை நல்லாருக்கும். நேரம் பத்தல நேரம் பத்தலன்னு சொல்லாம இருக்குற நேரத்தை எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொண்டு எப்படி உழைத்து முன்னேறுவதுன்னு நாம யோசிக்கணும். தெய்வத்தின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக எப்போ கிடைக்கும்னா உண்மையாக நாம நேரத்தைப் பயன்படுத்தி உழைத்து வேலையை சரியாக செய்யும்போது தெய்வத்தின் அருள் கிடைக்கும். ஞானசம்பந்தர்,

அப்பர் பெருமான் பற்றி நாம நிறைய படிச்சிருக்கோம். ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் இருவருக்கும் இறைவன் படிக்காசு கொடுக்கிறார். இருவரும் அதை வாங்கி அன்னதானம் செய்வாங்க. இருவரது மடங்களிலும் அன்னதானம் நடக்கும். ஒருநாள் ஞானசம்பந்தர் மடத்துல உணவு தயாராக தாமதம் ஆனது. உடனே மடத்துல உள்ளவங்களை அழைச்சி ஞானசம்பந்தர் கேட்குறாரு. அங்கே சாப்பாடு போட ஆரம்பிச்சிட்டாங்களே. நீங்க ஏன் இன்னும் போடலன்னு கேட்குறாரு.

அதுக்கு மடத்துல உள்ள ஒருத்தரு, மன்னிக்கணும். நம்ம காசைக் கொண்டு போய் சந்தையில கொடுத்தா அதுக்கு மாத்து குறையா இருக்கு. அதைப் பார்த்து பொருள் கொடுக்குறதுக்கு காலதாமதம் ஆகிடுது. அதுக்கு அப்புறம் சமைச்சி சாப்பாடு கொடுக்க காலதாமதம் ஆகுதுன்னு சொல்றாங்க.

எப்படி நமக்கு மட்டும் மாத்து குறைவா இருக்கு. சிவபெருமான் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியா தானே காசு கொடுத்தாருன்னு சொல்றாரு ஞானசம்பந்தர். உடனே சிவபெருமானிடம் இது குறித்து கேட்கிறார். அதற்கு சிவபெருமான் உன்னை விட ஒரு படி மேல அப்பர் பெருமான் செய்றாரு. இந்த தள்ளாத வயதிலும்கூட கோவில்ல போய் உழவாரப் பணியும் சேர்த்து செய்றாரு.

உடலால் உழைத்து என்னை அவர் வழிபாடு செய்கிறார். என்னைப் பாடி வழிபாடு செய்வது மட்டும் போதும்னு அவர் நினைக்கல. தன் உடலையும் வருத்தி முழுநேரத்தையும் எனக்காகவும், என் பக்தர்களுக்காகவும் செலவு செய்கிறார். இந்தப் பெருமையை உலகிற்கு காட்டவே அவருக்கு ஒரு மாத்து அதிகமாக சேர்த்து காசு கொடுத்தேன் என்கிறார் சிவபெருமான். இது ஞானசம்பந்தருக்காக மட்டும் சொன்னது அல்ல. அனைவருக்கும் சொன்னது.

இறைவனுக்காகப் பாடினாலும் கூட தன்னுடைய மற்ற நேரத்தை எல்லாம் கோவில் சுத்தம் செய்யவும், அடியார்களுக்குத் தொண்டு செய்வதும் என்று செலவு செய்கிறார் அப்பர் பெருமான். அதனால நாம நேரம் பத்தலன்னு சொல்லக்கூடாது. நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மிஞ்சிப் போனா ஒரு 15 நிமிடம் தெய்வ வழிபாட்டுக்கு ஒதுக்கினாலே போதும்.

அதனால எந்த ஒரு சின்ன செயலாக இருந்தாலும் அன்றாடம் திட்டமிட்டு செய்தால் நமக்கு நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். இந்த விஷயத்தை நம்மோட குழந்தைகளுக்கும் நாம கத்துக் கொடுக்கணும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.