ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க, இந்தியா இன்று அதிகாலை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற சிறப்பு பதிலடி நடவடிக்கையை நடத்தியது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
“பயங்கரவாத செயல்களை கண்காணித்து வந்த நமது ராணுவ அமைப்புகள் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை சரியாக திட்டமிட்டு நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் சில தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவுக்கு மேலும் வெளிநாட்டு பயங்கரவாத தாக்குதல்கள் வராமல் தடுக்க இதைச் செய்தோம். இது ஒரு கட்டுப்பாடான, நியாயமான, யுத்தத்தை அதிகரிக்காத நடவடிக்கை. எங்கள் நோக்கம், பயங்கரவாதத்தின் கட்டமைப்பை அழிப்பது மட்டுமே,” என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இணைந்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி கூறியதாவது: இன்று அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை இந்த தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் இலக்காக கொண்டபடி இதைத் திட்டமிட்டோம்,” என்றார்.
இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு செய்யப்பட்டவை. பாகிஸ்தான் ராணுவ முகாம்களைத் தவிர்த்தோம். பயங்கரவாத முகாம்களை மட்டும் தாக்கியுள்ளோம். பெரிய போர் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு, தாக்குதல்களை ஒழிக்கவே நடவடிக்கை எடுத்தோம். இந்தியாவின் நோக்கம் ஒன்றே, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளை அழித்து, எல்லை பிரச்சனைகள் இல்லாமல் அமைதியை நிலைநிறுத்துவது. அதற்கு இந்த தாக்குதல் மட்டுமின்றி இன்னும் சில தாக்குதல்களும் நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
