ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார்.
மரணமடைந்தவர் 23 வயது இம்தியாஸ் ஆஹமத் மாக்ரே, லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு உதவி செய்யும் பணியாளராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிந்தைய விசாரணையின் போது, குல்காமில் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆதரவு வழங்கியதாக அவர் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், பயங்கரவாதிகள் பதுங்கிய இடங்களை காட்டுவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, காவல்துறையினரும் ராணுவத்தினரும் இணைந்த நடத்திய சோதனையின் போது, மாக்ரே ஒரு ஆற்றில் தப்பிசெல்ல முயன்று குதித்தார். ஆனால் அவரின் முயற்சி தோல்வியடைந்து, ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
மக்ரேவின் குடும்பம், அவர் காவல்துறையினரிடம் பிடிபட்டபின் மர்மமான முறையில் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பீபீடி தலைவர் மெஹபூபா முக்தி கூறியதாவது:
“இது கொலை மாதிரி தெரிகிறது. இம்தியாஸ் இரு நாட்கள் முன்பு ராணுவத்தால் அழைத்து செல்லப்பட்டதாகவும், இப்போது அவரது சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
