நடிகை குயிலி பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருந்தாலும் அவர் ஆசை ஆசையாக கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் இன்று வரை வெளியாகவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.
நடிகை குயிலி சென்னை தி.நகரில் வசித்துக் கொண்டிருக்கும் போது அவர் தனது அம்மாவுடன் அவ்வப்போது கடைகளுக்கு சைக்கிள் ரிக்சாவில் செல்வார். அப்போதுதான் இயக்குனர் ஒருவர் அவரை பார்த்து நான் இயக்கும் திரைப்படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க விருப்பமா? என்று கேட்டார். சைக்கிள் ரிக்சாவிலேயே கதை சொல்லப்பட்டது. அந்த படம் தான் கண்ணெதிரே தோன்றினாள். மஞ்சரி என்ற பெயரில்தான் குயிலி இந்த படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படத்தை பார்த்த விநியோகிஸ்தர்கள் யாருமே வாங்கவில்லை என்பதால் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தான் சின்ன சின்ன கேரக்டர்களில் சில படங்களில் குயிலி நடித்தார். குறிப்பாக தூங்காதே தம்பி தூங்காதே, பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன படத்தை ரீமேக் செய்ய கே.பாலசந்தர் முடிவு செய்தார். கன்னடத்தில் முரளியின் அப்பா இயக்கத்தில் உருவான படத்தில் முரளி நடித்த படம் சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இந்த படத்தை பாலசந்தர் தனது கவிதாலாயா நிறுவனத்தின் மூலம் ரீமேக் செய்ய முடிவு செய்தார்.
படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்த நடிகை திரிஷா! நடந்தது என்ன?..
பாலச்சந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் பூ விலங்கு என்ற டைட்டிலில் இந்த படம் உருவானது. இதில் முரளிக்கு ஜோடியாக குயிலி நடித்தார். முதன்முதலில் குயிலி நாயகியாக நடித்து வெளியான படம் இதுதான். இந்த படம் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியானது. இளையராஜா இசையில் உருவான நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ஆத்தாடி பாவாடை காத்தாட என்ற பாடல் செம ஹிட். கண்ணில் ஏதோ மின்னல் அடிக்குது, போட்டேனே பூவிலங்கு ஆகிய பாடல்களும் இன்று வரை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
இந்த படத்தின் வெற்றியால் அதன் பிறகு அவர் ஒரு சில படங்களில் நாயகியாகவும் இரண்டாவது நாயகியாகவும் நடித்தார். குறிப்பாக பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கல்யாண அகதிகள் திரைப்படத்தில் சரிதாவுடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பார். அதன் பின்னர் ஆயிரம் பூக்கள் மலரட்டும், டிசம்பர் பூக்கள் போன்ற படங்களில் நடித்த குயிலிக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!
இந்த நிலையில் தான் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். நிலா அது வானத்து மேலே என்ற பாடல் இன்றுவரை ஹிட். ஜனகராஜ் உடன் இந்த பாடலில் அவர் ஆடிய குத்தாட்டம் அந்த காலத்தில் பிரபலமானது.
இதனை அடுத்து தான் அவர் சீரியல் பக்கம் கவனம் செலுத்தினார். கடந்த 1999 ஆம் ஆண்டு காசு அளவு நேசம் என்ற தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் அண்ணி, அண்ணாமலை, கோலங்கள், கனா காணும் காலங்கள், கலசம் உள்பட பல சீரியல்களில் நடித்தார். குறிப்பாக இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததுதான் அவருக்கு சூப்பர் ஹிட் ஆனது. அவர் இயக்குனர் ராஜசேகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனிலும் குயிலில் நடித்தார்.
குரூப் டான்ஸ் முதல் வில்லி வரை…. நடிகை சிஐடி சகுந்தலாவின் திரை பயணம்…!!
தற்போது கூட அவர் சீரியலில் பிஸியாக இருந்து வருகிறார். கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படமே வெளியாகவில்லை என்றாலும் அதன் பிறகு திரையுலகில் பல திரைப்படங்களில் தனது முத்திரை நடிப்பை பதித்த குயிலி, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.