படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்த நடிகை திரிஷா! நடந்தது என்ன?..

தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டு காலமாக முன்னணி ஹீரோயினாகவும் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை த்ரிஷா. சமீபத்தில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலகளவில் பிரபமடைந்தார். இந்த படம் அவருக்கு கம்பேக் கொடுத்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

த்ரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்பொழுது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் அஜித்துடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கல்யாண் கிருஷ்ணா இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் தமிழில் சதுரங்க வேட்டை 2, ராம் உள்ளிட்ட படங்களை தன்வசம் வைத்திருக்கிறார். பிருந்தா என்ற இணைய தொடரிலும் திரிஷா நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் திரிஷா ஜோடி படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலமாக தான் தான் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின் சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.

இப்படத்தை தொடர்ந்து மனசெல்லாம் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் திரிஷாவுக்கு கை கொடுக்கவில்லை. இந்த இரு திரைப்படங்களுக்கு பின் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் தான் சாமி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை திரிஷாவிடம் செய்தியாளர்கள் ஒருவர் அடுத்தடுத்த தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே இப்படமாவது உங்களுக்கு வெற்றியை தேடி தருமா? என்பது போல் கேள்வி எழுப்பினார்.

வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்த விஜய்! தெறிக்க விடும் அப்டேட்!

இந்த படம் வெற்றி பெற வில்லை என்றால் நான் சினிமாவில் இருந்து விலகிவிடுகிறேன் என திரிஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படமும் மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது. அடுத்ததாக விஜயுடன் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக மாற்றினார். அதை தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், ஜெயம் ரவி, விக்ரம், தனுஷ், விஷால் என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...