குரூப் டான்ஸ் முதல் வில்லி வரை… நடிகை சிஐடி சகுந்தலாவின் திரை பயணம்!

தமிழ் திரைப்பட வரலாற்றில் கவர்ச்சி நடிகைகளுக்கு என ஒரு தனி இடம் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை திரைப்படங்களில் கவர்ச்சி நடிகைகளின் பாடல் இடம் பெறுவது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்தது. அந்த வகையில் கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடுவது மட்டுமின்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் தான் நடிகை சிஐடி சகுந்தலா.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகை சகுந்தலா, சிறுவயதிலேயே கலைகள் மீது உள்ள ஆர்வம் காரணமாக நடிக்க வந்தார். இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் என்பதும் அவர்களை தன்னுடைய வருமானத்தில் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருந்ததால் அவர் இரவு பகலாக நடித்தார். ஆரம்ப காலகட்டத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக தான் சகுந்தலா இருந்தார். அன்பே வா உள்ளிட்ட பல படங்களில் இவர் குரூப் டான்ஸ் குழுவுடன்  நடனமாடி உள்ளார்.

குரூப் டான்சர்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஒருசில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களிலும் நடித்தார். இந்த நிலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் அவருடைய கட்டான உடல் மற்றும் களையான அழகை பார்த்து தங்கள் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படம் தான் சிஐடி சங்கர். இந்த படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக சி.ஐ.டி வேடத்தில் நடித்தார். இதன் பிறகு தான் அவருக்கு சிஐடி சகுந்தலா என்ற பெயர் ஏற்பட்டது.

70களில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம்.. ஹெலிகாப்டர் சண்டை காட்சி.. ‘துணிவே துணை’ படத்தின் கதை..!

cid sakunthala2

இந்த படத்தில் அவர் ரொமான்ஸ் மட்டுமின்றி அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்ததால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு மாடர்ன் தியேட்டர் தயாரித்த ஜஸ்டிஸ் விஸ்வநாதன், சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான புதிய வாழ்க்கை, கேபாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை, சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, எம்ஜிஆர் நடித்த இதயவீணை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ரஜினி, கமல் பீல்டில் இருந்த போது அவுட்டாகாத நடிகர் சிவகுமார்… அப்புறம் பீல்டு அவுட்…. என்ன காரணம்னு தெரியுமா?

இந்த நிலையில் நாயகியாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடும் கேரக்டர்களிலும் நடித்து கொண்டிருந்த சிஐடி சகுந்தலா அதன் பின் வில்லி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் முதல் முதலாக வில்லி வேடத்தில் நடித்த திரைப்படம் கண்காட்சி. இதனை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாகவே வில்லி வேடங்கள் தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசனின் தவப்புதல்வன் என்ற திரைப்படத்தில் அவர் வில்லியாக நடித்து அசத்தினார்.

cid sakunthala1
சிவாஜி கணேசன் பார்வையற்றவராக நடித்த அந்த படத்தில் அவருக்கு எதிராக சதி செய்து அவரை பழிவாங்கும் அற்புதமான கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் படிக்காத மேதை. கிரகப்பிரவேசம். எங்க மாமா போன்ற படங்களிலும் அவர் வில்லி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். சகுந்தலாவின் கவர்ச்சி நடனத்திற்கு என்றே அந்த காலத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

கடந்த 60கள், 70களில் கதாநாயகிகள் கிளாமராக நடனமாட மாட்டார்கள் என்பதால் கவர்ச்சி நடனம் ஆடும் நடிகைகளுக்கு என ஒரு மார்க்கெட் இருந்தது. ஆனால் 80களுக்கு அப்புறம் கதாநாயகிகளே கவர்ச்சி நடனம் ஆடியதால் தனியாக கவர்ச்சி நடனம் ஆடுபவர்களின் மார்க்கெட் சரிந்தது. இதனால் ஒரு கட்டத்தில் சி.ஐ.டி சகுந்தலா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

அதனை அடுத்து அவர் சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், சொந்தம், வாழ்க்கை ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அக்னிசாட்சி உள்பட பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார். கிளாமர் டான்ஸர் மூலம் தனது நடன முத்திரையை பதித்து ரசிகர்களை கவர்ந்த சிஐடி சகுந்தலா அதன்பின் வில்லியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...