கோமாளிக்கு பிறகு ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்ட ரெடியாகிட்டாரு ஜெயம் ரவி!.. அதுவும் அந்த இயக்குநர் இயக்கத்திலா?..

Published:

நடிகர் ஜெயம் ரவி இந்த ஆண்டு பல படங்களை வரிசையாக வெளியிடும் முடிவு உறுதியாக உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே அகிலன், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக இறைவன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

இறைவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன், ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், ஜெயம் ரவியின் இன்னொரு காமெடி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்கிற அறிவிப்பை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தற்போது ஜெயம்ரவி வெளியிட்டுள்ளார்.

காமெடியும் கை வந்த கலை:

உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, கோமாளி உள்ளிட்ட படங்கள் ஜெயம் ரவியின் காமெடி பக்கத்தையும் ரசிகர்களுக்கு அதிக அளவில் காட்டியிருந்தது. சாக்லேட் பாயாக ஆகவும் ஆக்சன் ஹீரோவாகவும், ராஜாவாகவும் நடித்து மிரட்டிய ஜெயம் ரவி தர லோக்கலாக இறங்கி காமெடியிலும் கலக்க முடியும் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் அடுத்ததாக ஜெயம் ரவி நடித்து வரும் ’பிரதர்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி:

டைரக்டர் ராஜேஷ் காமெடி படங்களை இயக்குவதில் கில்லாடி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபகாலமாக அவர் இயக்கும் படங்கள் பெரியதாக ஒர்க் அவுட் ஆகாத நிலையிலும், ஜெயம் ரவியுடன் அவர் இணைந்துள்ள பிரதர் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

F6SAMqlXMAAuPf8

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறிய நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவியும் பெரிய படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதை மற்றும் ரசிகர்களை மகிழ்விக்க கூடிய படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்பதை நிரூபித்து வருகிறார்.

பிரியங்கா மோகன் ஹீரோயின்:

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி காம்பினேஷனில் உருவாகி வரும் பிரதர் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஃபன் ரோலர் கோஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், ராஜேஷ் படத்தில் அம்மாவாக நடித்து அசத்தும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். நடிகை பூமிகா உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...