ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இனிமேல் இந்த படத்திற்கு நான் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட படப்பிடிப்பு திடீரென நின்றது. இதனால் இயக்குனர் மற்றும் ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்த நிலையில் கமல்ஹாசன் மீதி படத்தை எடுக்க பணம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் திரையுலகை பொருத்தவரை கடுமையான போட்டியாளர்கள். ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என்றும் ஒருவர் படத்தை விட இன்னொருவர் படம் அதிக வசூல் செய்ய வேண்டும் என்றும் தீவிரமாக இன்று வரை உழைத்துக் கொண்டிருப்பவர்கள். ஆனாலும் இருவருமே ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கமர்சியல் படம் வேண்டாம், சாதனைக்காக ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்துடன் இருந்த இயக்குனர்களில் ஒருவர் தான் மகேந்திரன். அவர் ரஜினியை வைத்து ஒரு கனவு படத்தை எடுக்க முடிவு செய்தார். அந்த படம் தான் முள்ளும் மலரும்.
அந்த படத்தின் கதையை கேட்ட ரஜினிகாந்த் தான் திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒரு அருமையான படத்தில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும் தற்போது அதன் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மகேந்திரனிடம் கூறினார். இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
கல்கி இதழில் உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் என்ற நாவலின் கதையை தான் படமாக மகேந்திரன் திரைப்படமாக்க முடிவு செய்தார். இந்த படத்தை தயாரிக்க வேணு செட்டியார் என்பவர் முன்வந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது ரஜினிகாந்த் என்று சொன்ன பிறகு அவர் தயங்கினார். ஆனால் மகேந்திரன் உறுதியாக ரஜினி ஹீரோவா நடித்தால் மட்டுமே இந்த படத்தை இயக்குவேன் இல்லை என்றால் இந்த படத்தை இயக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனை அடுத்து அரை மனதுடன் அவர் இந்த படத்தை தயாரிக்க சமாதித்தார். படம் வளர்ந்து கொண்டு இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கு மகேந்திரன் படத்தை போட்டு காட்டிய போது அவர் அதிர்ச்சி அடைந்தார். என்னய்யா படம் எடுத்து வச்சிருக்கே. வசனம் பேச வேண்டிய இடத்தில் ஒன்றுமே இல்லை, இதை எப்படி ஆடியன்ஸ் ரசிப்பார்கள் என்று கேட்டார்.
எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!
ஆனால் இளையராஜாவின் பின்னணி இசைக்கு பிறகு இந்த படத்தை பாருங்கள், கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அதில் திருப்தி அடையாத தயாரிப்பாளர் இந்த படம் தேறாது என்ற முடிவு செய்து இனிமேல் இந்த படத்திற்கு நான் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
சரத்பாபு மற்றும் ஷோபாவின் காதல் காட்சிகள் மற்றும் செந்தாழம் பூவே ஆகிய பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டிய இருந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை கேள்விப்பட்ட கமல்ஹாசன், தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு மகேந்திரனை சந்தித்த கமல்ஹாசன் இந்த படத்தை நீங்கள் முடியுங்கள், எவ்வளவு பணம் வேண்டுமோ அந்த பணத்தை நான் தருகிறேன், படம் ரிலீசுக்கு பிறகு நீங்கள் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று கூறினார்.
அதன் பிறகு கமல்ஹாசனின் பண உதவியால் தான் இந்த படம் முழுமை பெற்றது. முதல் இரண்டு நாள் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் அதன் பிறகு ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் பிறகு மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. குறிப்பாக தயாரிப்பாளர் எந்தெந்த காட்சிகளை குறை கூறினாரோ அந்த காட்சிகளை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடினார். பாசமலர் படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை பாசத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய படம் என்று அனைவரும் கூறினார்.
குறிப்பாக காளி என்ற கதாபாத்திரத்திற்கு ரஜினிகாந்த் உயிர் தந்திருந்தார் என்பதும் இரண்டு கையும் காலும் போயிருந்தா கூட இந்த காளி பொழச்சுக்குவான் சார், கெட்ட பையன் சார் அவன் என்று சரத்பாபுவுடன் ரஜினிகாந்த் பேசும் வசனம் இன்று பார்த்தால் கூட புல்லரிக்கும். அந்த அளவுக்கு ரஜினியின் கனவு படம் ஒன்று உருவாக கமல்ஹாசன் ஒரு காரணமாக இருந்தார் என்பது பலரும் அறியாத உண்மையாக உள்ளது.