கிளைமாக்ஸை முடிவு செய்துவிட்டு கதை எழுதிய ரஜினிகாந்த்.. நெருங்கிய நண்பர் தான் இயக்குனர். ‘வள்ளி’ உருவான கதை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ஒரே திரைப்படம் வள்ளி. இந்த படம் வெற்றி பெற்றவுடன் பிரபல ஊடகத்திற்கு அவர் பேட்டி அளித்திருந்தபோது முதன்முதலாக எனக்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ்தான் மனதில் தோன்றியது என்று கூறினார்.

நம்முடைய திரைப்படங்களில் ஒரு பெண்ணை ஒரு ஆண் கெடுத்துவிட்டால், அந்தப் பெண்ணை அந்த ஆணுக்கு திருமணம் முடித்து வைப்பது என்பது போன்றுதான் படத்தை முடித்து இருப்பார்கள். அந்த பெண் எப்படி அந்த ஆணுடன் சந்தோஷமாக இருப்பார் என்று யாருமே காண்பிப்பதில்லை. கண்டிப்பாக ஒரு பெண் தன்னை கெடுத்தவன் கணவனாக வந்தால் அவனை பழிவாங்க வேண்டும் என்றுதான் நினைப்பாளே தவிர அவனுடன் வாழ வேண்டும் என்று நினைக்க வாய்ப்பே இல்லை. இதுதான் எனக்கு தோன்றிய கிளைமாக்ஸ் காட்சி என்று ‘வள்ளி’ கதை உருவானது குறித்து ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்பி முத்துராமன்.. சமரசம் செய்த பாலசந்தர்.. ‘ஸ்ரீராகவேந்திரர்’ உருவான கதை..!

தன்னை கெடுத்தவனை திருமணம் செய்வதுபோல் நடித்து அவனை பழிவாங்குவது என்பதுதான் கிளைமாக்ஸ் என்று முடிவு செய்துவிட்டேன். அதன் பிறகு தான் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களை வடிவமைத்தேன். வாத்தியார், முதலமைச்சர், வீரய்யா போன்ற கேரக்டர்கள் எல்லாம் அதன் பிறகு தோன்றியதுதான் என்று ரஜினிகாந்த் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

‘வள்ளி’ படத்தில்தான் பிரியா ராமன் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே நட்ராஜ்தான் ஏற்கனவே ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

valli1

இந்த படத்தின் கதைப்படி வள்ளி கிராமத்தில் சந்தோஷமாக வாழ்வார், ஒரு கட்டத்தில் அவர் பட்டணத்தில் சென்று படித்து விட்டு திரும்புவார். அவரை கிராமத்தில் உள்ள நாயகன் காதலிப்பார். ஆனால் நாயகன் மீது வள்ளிக்கு எந்தவிதமான ஈர்ப்பும், காதலும் இருக்காது.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

இந்த நிலையில் தான் பட்டணத்தில் இருந்து ஒரு இளைஞன் தனது நண்பர்கள் குழுவுடன் வருவான். அவன் மீது ஈர்ப்பு கொண்ட வள்ளி அவனை காதலிப்பாள், அவனும் காதலிப்பது போல் நடிப்பான். ஒரு கட்டத்தில் வள்ளியை அந்த இளைஞன் அனுபவித்தவுடன் ஊருக்கு சென்று தனது தந்தையுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுவான்.

ஆனால் அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது. இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை வள்ளி உணர்வாள். எந்த இடத்தில் தன்னை இழந்தாரோ அந்த இடத்தில் தனது போராட்டத்தை வள்ளி தொடங்குவார். இது செய்தியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அதன் பிறகு தான் வள்ளியை ஏமாற்றியது முதலமைச்சரின் மகன் என்று தெரியவரும்.

இதனை அடுத்து முதலமைச்சரே தனது மகனுடன் வள்ளியை சமாதானப்படுத்துவதற்காக அந்த கிராமத்துக்கு வருவார். அப்போது திடீரென வள்ளி ஒரு பெரிய கத்தியை எடுத்து தன்னை ஏமாற்றியவனை குத்தி கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்று விடுவாள். சிறையில் இருந்து திரும்பி வரும் வரை நாயகன் அவருக்காக காத்திருப்பான். ரஜினி இருவரையும் இணைத்து வைத்தவுடன் சுபம் என்று முடியும்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்ததால் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். அவர் கம்போஸ் செய்த ஐந்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, ‘என்னுள்ளே என்னுள்ளே’ என்ற சொர்ணலதா பாடிய பாடல் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

valli

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த படம் 16 வயதினிலே படத்தின் சாயலாக இருந்தாலும் திறமையான திரைக்கதை, வசனம் காரணமாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தில் கிடைத்த லாபத்தை ரஜினிகாந்த் தனது நண்பர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பிரித்து கொடுத்ததாக கூறப்பட்டது. நண்பர்களுக்கு உதவி செய்வதற்காகவே எடுத்த வள்ளி திரைப்படத்தில் அவரும் வீரையா என்ற ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டர் மூலம் ரஜினிகாந்த் அவ்வப்போது பேசும் அரசியல் வசனங்கள் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...