ஏ. ஆர் ரகுமானிற்கு ஆதரவாக இறங்கிய கார்த்தி! கோபத்தின் உச்சியில் இருக்கும் ரசிகர்கள்!

Published:

இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், ரசிகர்களும் கொந்தளித்து இருக்கும் நிலையில் ஏ. ஆர் ரகுமானின் மகள் கதிஜா, நடிகர் கார்த்தி, யுவன் சங்கர் ராஜா, சரத்குமார் என சில சினிமா பிரபலங்கள் தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி மழை காரணமாக நின்று போன மறக்குமா நெஞ்சம் ஏ ஆர் ரகுமான் மியூசிக் கான்செப்ட் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்துள்ளது. இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரையிலான 25 ஆயிரம் டிக்கெட்ஸ் 40 ஆயிரம் பேருக்கு விற்று உள்ளனர்.

மேலும் நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களுக்கு பார்க்கிங் வசதி, தண்ணீர் வசதி, கழிவறை வசதி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அந்த இடத்தில் பயங்கரமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட நிக்க கூட முடியாத அளவுக்கு கூட்டமும் இருந்துள்ளது. பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு உட்கார கூட இடம் கிடைக்கவில்லை. சில பெண்களுக்கு பாலியல் தொல்லை, நெரிசலில் மாட்டிக்கொண்ட சின்ன குழந்தைகள், வயதானவர்கள் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை ரசிகர்களும் பொதுமக்களும் சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமானும் நடந்ததுக்கு வருத்தம் தெரிவித்து மேலும் பாதிக்கப்படடவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஏ. ஆர் ரகுமானிற்கு ஆதரவாக யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடந்த குழப்பத்திற்கு இசையமைப்பாளர் பொறுப்பேற்க முடியாது இதற்கெல்லாம் நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்தவர்கள் மீது தான் தவறு என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமானும் ஆதரவாக நடிகர் கார்த்தி கூறியது, இந்த குழப்பங்களுக்கு மத்தியில் தன்னுடைய குடும்பமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஆனாலும் நான் ஏ ஆர் ரகுமானுக்கு தான் ஆதரவாக நிற்கிறேன். மேலும் நாம் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக ஏ ஆர் ரகுமான் இசை மீது அன்பு செலுத்திக்கொண்டு வருகின்றோம், இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது.

இதனால் ஏ ஆர் ரகுமானும் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருப்பார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பு ஏற்பார்கள் என நம்புகிறேன். நாம் அனைவரும் ஏ ஆர் ரகுமானுக்கு அன்பு செலுத்துவது மாதிரி ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அவர் மீது அன்பு செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கார்த்தியின் இந்த பதிவை ரசிகர்கள் அனைவரும் புறக்கணித்துள்ளனர்.

உங்கள் குடும்பம் விஐபி சீட்டில் பத்திரமாகவும், ஜாலியாகவும் இருந்திருக்கலாம். 25 ஆயிரம் சீட்ஸ் இருக்கும் டிக்கெட்களை 40,000 பேருக்கு விற்றது உங்களுக்கு தெரிந்திருக்காது, உங்களுக்கு அவரை பர்சனலாக தெரிஞ்சிருக்கலாம், ஆனால் எங்களுக்கு அவர் இசையின் மூலம் தான் தெரியும் என ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த கௌதமி! அட இவர்களுக்கும் அதே பிரச்சனையா?

மேலும் எங்களுக்கும் ஏ. ஆர் ரகுமானிற்கும் இருக்கும் பொதுவான தொடர்பு இசை மட்டும் தான், கச்சேரி நடத்துவதாக அறிவிப்பு செய்துள்ளார்கள், ஏற்பாட்டாலர்களையும் அமத்தியுள்ளனர். ரசிகர்கள் நாங்க ஏ.ஆர் ரகுமானிற்காக தான் டிக்கெட் எல்லாம் வாங்கினோம், அவர் முடிந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டும்.

பெண்களுக்கு நடந்த அத்துமீறல்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத பல விஷயங்களுக்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனி அந்த ஈவண்ட் ஆர்கனைசர் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என ஏ.ஆர் ரகுமான் கூறுவாரா என பல கேள்விகளை முன்வந்து வருகின்றனர்.

முன்னதாக கோயம்பத்தூரில் நடந்த கான்சப்டில் இதேபோல பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது, அதை பார்த்தாவது சென்னையில் முன்னேற்பாடுகளை செய்து இருந்தால் எவ்வளவு அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாம் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

 

மேலும் உங்களுக்காக...