நாட்டியத்தில் இருந்து நடிப்பு வரை… நடிகை ஈ.வி.சரோஜாவை கட்டிப்போட்ட திருமண வாழ்க்கை!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் கலை குடும்பத்தில் பிறந்து சினிமா பின்னணியுடன் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஈவி சரோஜா தமிழ் திரை உலகில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் கலக்கினார். நடிகை சரோஜா திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண் என்ற கிராமத்தில் பிறந்தவர் என்பதால் தனது கிராமத்தின் ஊரின் முதல் எழுத்தை சேர்த்துக்கொண்டு ஈ.வி. சரோஜா என்று அழைக்கப்பட்டார்.

ஈ.வி சரோஜாவின் தந்தையும் தாயும் தஞ்சாவூரில் இசை கலைஞராக இருந்தார்களாக புகழ்பெற்றவர்கள். எனவே அவருக்கு சிறுவயதிலிருந்தே கலைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக பாட்டு கற்றுக்கொள்வது, நடனம் கற்றுக்கொள்வது ஆகியவற்றில் அவர் ஆர்வத்துடன் இருந்தார். பரதநாட்டியத்தை அவர் முறைப்படி கற்றுக் கொண்டார் அதோடு சிறு வயதிலேயே அரங்கேற்றம் செய்தார்.

எம்ஜிஆர்-சிவாஜி நடித்த ஒரே படம்.. ரசிகர்கள் ரகளை.. தியேட்டரில் அடிதடி.. இன்று வரை ரீரிலீஸ் ஆகாத படம்..!

ev saroja

இந்த நிலையில் ஏழாவது வயதில் தந்தையை இழந்து அவரது குடும்பம் தவித்து வந்தது. இருப்பினும் அவரது தாயார் ஜானகி தனது நான்கு குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்தார். சரோஜாவுக்கு நடனக்கலையில் விருப்பம் என்பதை தெரிந்து கொண்ட அவரது தாயார் மிகப்பெரிய நடனக்கலையை கற்று கொடுக்கும் குருவிடம் மாணவியாக சேர்த்தார். அவரது நாட்டிய குரு அவரை முதன்முதலில் பார்த்தபோது இந்த சிறுமி கண்டிப்பாக நாட்டியத்தில் மிகப்பெரிய அளவில் வருவார் என்று கணித்தார்.

இந்த நிலையில் அரங்கேற்றம் நிகழ்த்திய சரோஜாவுக்கு பல நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரை சினிமா உலகினர் கவனிக்க தொடங்கி அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1952 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த என் தங்கை என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் சகோதரியாக பார்வை குறைபாடு கொண்டவராக அற்புதமாக நடித்திருந்தார்.

17 வயதிலேயே அவர் தனது முதல் படத்தில் நடிப்பில் முத்திரையை பதித்த நிலையில், அதன் பிறகு அவர் எம்ஜிஆரின் குலேபகாவலி, மதுரை வீரன், புதுமைப்பித்தன், உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

சிவாஜியின் நவராத்திரி படத்தை வைத்து தான் எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் படம் எடுத்த இயக்குனர்..

ev saroja1 1

பின்னர் அவர் ஒரு சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தார். அவற்றில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த இந்த படத்தில் செளகார் ஜானகி நாயகியாக நடிக்க இரண்டாவது நாயகியாக நடித்த ஈவி சரோஜாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக நடித்த அவர் ஜெமினியுடன் ஒரு டூயட் பாடலிலும் நடித்திருப்பார்.

இந்த நிலையில் தான் கடந்த 1963ஆம் ஆண்டு தனது சகோதரர் ஈவி ராஜன் தயாரிப்பில் உருவான கொடுத்து வைத்தவள் என்ற திரைப்படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஈவி சரோஜா நடித்த இந்த படம் தான் அவருடைய கடைசி படமாகவே அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இயக்குனர் டிஆர் ராமண்ணா அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கணவர் கூறியதை அடுத்து கணவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர் திரையுலகிலிருந்து விலகினார். ஒரு அற்புதமான நடிகையை டிஆர் ராமண்ணா தனது வீட்டுக்குள்ளே முடக்கி விட்டார் என்று திரையுலகினர் கூறினர்.

சிவாஜி நடித்த கவரிமான்…. கதாநாயகிக்கு டூப் வைத்து எடுத்த இயக்குனர்.. திரையில் பார்த்து அசந்து போன படக்குழு..!

ஆனால் அதே நேரத்தில் அவர் நாட்டிய பள்ளி ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு நடன ஆசிரியையாக இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் காலமானாலும் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.