எம்ஜிஆர்-சிவாஜி நடித்த ஒரே படம்.. ரசிகர்கள் ரகளை.. தியேட்டரில் அடிதடி.. இன்று வரை ரீரிலீஸ் ஆகாத படம்..!

தமிழ் திரை உலகில் இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரும் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடித்தது ஒரே ஒரு படம் தான். அந்த படமும் திரையில் வெளியானபோது மிகப்பெரிய பிரச்சனை ரசிகர்கள் மத்தியில எழுந்ததால் அந்த படம் அதன் பிறகு ரீரிலீஸ் கூட செய்யப்படவில்லை.

எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. இந்த படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கி இருந்தார். பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரி இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

இந்தப் படத்தின் கதை என்னவென்றால், சிவாஜி கணேசன் மங்களா என்ற பெண்ணை பெண் பார்க்க செல்வார். ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர்கள் சம்மதித்து விடுவார்கள். ஆனால் கடன் உள்ளிட்ட பிரச்சனை காரணமாக திருமணம் நடக்காது. சிவாஜி தான் தன்னை பெண் பார்க்க வந்தார் என்பது மங்களாவுக்கு தெரியாது.

koondukili2

இந்த நிலையில் திருமணம் செய்ய முடியாமல் போனது, கடன் ஆகிய தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் சிவாஜி படுத்திருப்பார். அப்போது எம்ஜிஆர் அவரைக் காப்பாற்றுவார். தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்வார். அப்போது பெண் பார்க்க சென்ற பெண் தற்போது எம்ஜிஆரின் மனைவியாகி இருப்பதை அறிந்து சிவாஜி அதிர்ச்சி அடைவார். ஆனால் எம்ஜிஆரின் மனைவி சரோஜாவுக்கு சிவாஜி தான் முன்பு தன்னை பெண் பார்க்க வந்தவர் என்பது தெரியாது.

இந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எம்ஜிஆர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக எம்.ஜி.ஆரின் மனைவியின் மனதை மாற்ற சிவாஜி முயற்சி செய்வார். ஆனால் சரோஜா அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேறும் சரோஜாவை தொடர்ந்து சிவாஜி டார்ச்சர் செய்வார்.

koondukili1

இந்த நிலையில்தான் சிறையில் இருந்து வெளியே வரும் எம்ஜிஆர், சிவாஜி தனது மனைவியை டார்ச்சர் செய்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்து அவரை தேடி போவார். சரோஜா தன்னை ஏற்றுக்கொள்ளாததால் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் சிவாஜி படுத்து இருப்பார். அப்போது எம்ஜிஆர் வந்து அவரை காப்பாற்றி ஏன் தன் மனைவியை டார்ச்சர் செய்தாய் என்று அடித்து உதைப்பார், இருவருக்கும் இடையே சண்டை வரும்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

அப்போது சிவாஜியை ஒருதலையாக காதலிக்கும் சொக்கி என்ற பெண் எம்ஜிஆரிடம் ஏற்கனவே இவருக்கு பார்த்த பெண்தான் உங்கள் மனைவி என்று கூறுவார். சிவாஜியும் திருந்திவிடுவார். இதனை அடுத்து சொக்கி என்ற அந்த பெண்ணையே சிவாஜிக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்ச்சியோடு அவர்களை எம்ஜிஆர் அனுப்பி வைப்பார், படம் சுபமாக முடியும்.

koondukili

இந்த படம் கடந்த 1954ஆம் ஆண்டு திரையில் வெளியான போது எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் திரையரங்குகளில் சண்டை போட்டதாகவும், படச்சுருள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த படம் ஓடிய பின் படம் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.

எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

எம்ஜிஆர் முதல் அரை மணி நேரம் மட்டும் படத்தில் வருவார், அதன் பின் சிறைக்கு சென்று கடைசியில்தான் வருவார் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்து அதிருப்தி அடைந்தனர். அதேபோல் சிவாஜியை ஒரு கெட்டவனாக, வில்லனாக பார்க்கவும் சிவாஜி ரசிகர்கள் விரும்பவில்லை. எனவே இந்த படம் தோல்வி அடைந்தது. இருப்பினும் தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமை மட்டும் இந்த படத்திற்கு உண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...