அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் 52 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான் என பிரபல நடிகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அஜீத் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற படம் உள்பட பல திரைப்படங்களில் நாயகியாகவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.
தமிழில் 6 படங்கள் தான்.. ஆனால் பிரபல நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய விதி..!
நடிகை தபு ஹைதராபாத்தில் பிறந்தார். அவர் மூன்று வயதாக இருக்கும் போது அவரது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தபு உள்பட இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை அவர் அனாதையாக விட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து தபுவின் அம்மா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று அங்கு டீச்சர் வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்தார். இந்த நிலையில் தபுவின் சகோதரி திரையுலகில் அறிமுகமானார். அவருக்கு ஓரளவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்த போது தான் தபுவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
தபுவின் முதல் படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு மிகச் சிறிய கேரக்டர் என்பதால் அவருக்கு பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆனால் தபுவுக்கு அதன் பின்னர் ஹிந்தி மற்றும் தெலுங்கில் வாய்ப்பு கிடைத்த நிலையில் ’காதல் தேசம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக மணிரத்னம் இயக்கிய ’இருவர்’, அர்ஜுன் நடித்த ’தாயின் மணிக்கொடி’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
ஊர் உலகையே சிரிக்க வைத்த காந்திமதி.. கவனிப்பாரின்றி அனாதையாக இறந்து போன சோகம்..
தபுவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது ’கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம் தான். அஜித் ஜோடியாக இந்த படத்தில் நடித்து அசத்தி இருப்பார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பராக நடித்திருப்பார்.
இதனை அடுத்து ’சினேகிதியே’ என்ற திரைப்படத்தில் அவர் ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதும் இந்த படமும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அவர் தமிழில் பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தார்.
‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இரண்டு பாகங்களில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் அவர் தான் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தபு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் நாகார்ஜுனனை காதலிப்பதாக கிசுகிசுக்கள் இருந்தன. ஆனால் நாகார்ஜுனா நானும் தபுவும் மிகச் சிறந்த நண்பர்கள் என பேட்டி அளித்து கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் நாகார்ஜூனா மனைவி அமலாவும் தபுவின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தனது நெருங்கிய தோழி என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் சல்மான் கான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கிய போது அவருடன் தபுவும் அந்த வழக்கில் சிக்கினார். அதில் இருந்து விடுபட மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் அஜய் தேவ்கன் தான்.
சொந்த வாழ்க்கையில் மட்டுமின்றி திரை உலக வாழ்க்கையிலும் தபுவுக்கு அவர் உதவி செய்தார். அப்போது அவருக்கும் அஜய் தேவ்கன் இடையே கிசுகிசு கிளம்பியது. ஆனால் அவர் அதைப் பற்றி தபு கவலைப்படவில்லை.
ஒரு பேட்டியில் அஜய் தேவ்கன் ’தபுவுக்கு சிறுவயதில் இருந்தே ஒரு ஆழமான சோகம் இருக்கிறது என்றும் அவர் மூன்று வயதாக இருக்கும் போது அவருடைய அப்பா விட்டு விட்டு சென்று விட்டதால் கணவரும் விட்டுவிட்டு சென்று விடுவாரோ என்ற பயம் காரணமாகதான் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்று தபு திருமணம் செய்யாததன் உண்மையான காரணத்தை கூறினார்.
காதலித்து திருமணம்.. 26 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து… நடிகை லிசி வாழ்க்கையில் நடந்தது என்ன?
தற்போது 52 வயது ஆகியும் அவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு இது ஒன்றுதான் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு குழந்தைகள் மீது மிகுந்த ஆசை. தான் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசைப்படுவதாகவும், டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் அவர் தனது வயதை கருத்தில் கொண்டு அந்த முடிவையும் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.