தமிழில் 6 படங்கள் தான்.. ஆனால் பிரபல நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய விதி..!

தமிழ் திரை உலகில் 6 படங்கள் மட்டும் நடித்த நடிகை ஒருவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த 2000 ஆண்டு வெளியான முரளி நடித்த ’மனுநீதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரதியுஷா. இதனை அடுத்து அவர் ’சூப்பர் குடும்பம்’, ’பொன்னான நேரம்’, ’தவசி’, ’கடல் பூக்கள்’ மற்றும் ’சவுண்ட் பார்ட்டி’ ஆகிய 6 திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

ஊர்  உலகையே சிரிக்க வைத்த காந்திமதி.. கவனிப்பாரின்றி அனாதையாக இறந்து போன சோகம்..

இந்த நிலையில் அவர் சித்தார்த் என்பவரை காதலித்த நிலையில் இரு வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இருவரும் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதில் பிரதியுஷா மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி பிரதியுஷா காலமானார். ஆனால் சித்தார்த் சிகிச்சையின் பலனால் உயிர் தப்பினார்.

pratyusha1

இந்த நிலையில் பிரதியுஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், சித்தார்த் தான் கொலை செய்ததாகவும் அவரது குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கை ஆய்வு செய்தபோது தடயவியல் நிபுணர்கள் பிரதியுஷா உடலில் நகக்கீரல் இருந்ததாக கூறினர்.

இதனை அடுத்து சித்தார்த் இடம் தீவிர விசாரணை செய்த போலீசார் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திரைப்படத்தில் நடித்தது போலவே மர்மமான முறையில் மரணம் அடைந்த கமல் பட நடிகை..!

இருப்பினும் பிரதியுஷா இறப்பிற்கு சித்தார்த் மட்டும் காரணம் இல்லை என்றும் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டினர். இருப்பினும் அவர்களிடம் எந்தவிதமான ஆதாரம் இல்லை என்பது மட்டுமின்றி வழக்கு நடத்த பணமும் இல்லை என்பதால் அவர்கள் விட்டுவிட்டனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது பிரதியுஷா இறந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தாயார் சரோஜினி தேவி பிரதியுஷா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூட்டுப் பாலியல் நடந்து இருக்கலாம் என்று புகார் அளித்திருந்தார். இருப்பினும் இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காதலித்து திருமணம்.. 26 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து… நடிகை லிசி வாழ்க்கையில் நடந்தது என்ன?

பிரதியுஷா மரணத்திற்கு பின்னர் அவரது தாயார் தனது மகள் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் 6 படங்கள் நடித்த மட்டுமே நடித்த நடிகை பிரதியுஷா திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று திரையுலகினர் கணித்திருந்தனர். ஆனால் அவர் காதலில் விழுந்ததால் பரிதாபமாக உயிர் இழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews