ரூ.12,999க்கு ஒரு சூப்பர் விவோ ஸ்மார்ட்போனா? இதோ முழு விவரங்கள்..!

By Bala Siva

Published:

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலை அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக ரூ.20,000க்கும் அதிகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.

ஆனால் ரூ.12,999 என்ற விலையில் சூப்பர் மாடல் ஒன்றை விவோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்த நிலையில் இந்த மாடல் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடலின் முழு விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

vivo Y16 என்ற ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியானது. 6.51-இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசர், 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB/128GB ஸ்டோரேஜை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பின் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி கேமரா இதில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அம்சத்தில் இயங்குகிறது. 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுவதால் சார்ஜ் பிரச்சனையே இருக்காது.

இந்தியாவில் vivo Y16 ஸ்மார்ட்போனின் விலை 3GB/64GB மாடல் ரூ.10,499 இல் என்றும், 4ஜிபி/64ஜிபி மாடலின் விலை ரூ.11,999, மற்றும் 4ஜிபி/128ஜிபி மாடலின் விலை ரூ.12,999 என்றும் விற்பனையாகிறது.

vivo Y16 ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

* 6.51-இன்ச் HD+ (1600×720) LCD டிஸ்ப்ளே
* MediaTek Helio P35 பிராசசர்
* 3ஜிபி/4ஜிபி ரேம்
* 32ஜிபி/64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ்
* 13-மெகாபிக்சல் பிரதான சென்சார், 2-மெகாபிக்சல் ஆழமான சென்சார் கேமரா
* 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 ஃபன்டச் ஓஎஸ் 12 உடன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மேலும் உங்களுக்காக...