ஊர்  உலகையே சிரிக்க வைத்த காந்திமதி.. கவனிப்பாரின்றி முடிந்த வாழ்க்கை!

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகை காந்திமதி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார், ஆனால் அவரது கடைசி காலத்தில் அவர் எந்தவித அன்பும் ஆதரவும் இன்றி அனாதையாக இறந்து போன சோகம் தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.

மானாமதுரையை சேர்ந்த காந்திமதி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடக நடிகையாக இருந்தார். அவர் 1000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக மனோரமாவுடன் அவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் நடித்தது போலவே மர்மமான முறையில் மரணம் அடைந்த கமல் பட நடிகை..!

இந்த நிலையில் தான் 1960களில் திரைப்படத்தில் அறிமுகமானார் காந்திமதி. அப்போது சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த காந்திமதி சில படங்களில் கிளாமராகவும் நடித்தார் என்பதும் அதன் பிறகு அவர் குணச்சித்திர நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

gandhimathi2

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன் உட்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். கிராமத்து பாணி பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

குறிப்பாக பாரதிராஜாவின் முதல் திரைப்படமான ’16 வயதினிலே’ திரைப்படத்தில் குருவம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். வாயாடி கேரக்டரான இந்த கேரக்டரில் அவர் அச்சு அசலாக ஒரு ரவுடிப் பெண் போல் நடித்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் கிராமத்து கேரக்டர்களில் தான் நடித்தார். குறிப்பாக ’கரகாட்டக்காரன்’ படத்தில் ராமராஜன் அம்மாவாகவும் ’சின்னத்தம்பி பெரிய தம்பி’ படத்தில் சத்யராஜ் பிரபுவின் அம்மாவாகவும் நடித்திருந்தார். இந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக ’மை டியர் பூதம்’ என்ற தொலைக்காட்சி தொடரில் அவரது பாட்டி கேரக்டர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதன் பிறகு ’கல்கி’, ’கோலங்கள்’, ’பொண்டாட்டி தேவை’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.

gandhimathi1

நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்ததால் அவர் தனது சொந்த வாழ்க்கையை கவனிக்கவில்லை. கடைசிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் தனது சகோதரி, சகோதரர் ஆகியவர்களை அரவணைத்து வந்தார். அவர்கள் குழந்தைகளை தன்னுடைய குழந்தை போல் வளர்த்து வந்தார்.

தன்னுடைய கடைசி காலத்தில் தனது சகோதரர், சகோதரியின் குழந்தைகள் காப்பாற்றுவார்கள் என்று நம்பி தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர்களுக்காகவே தண்ணீரை போய் செலவழித்தார். ஆனால் கடைசி காலத்தில் அவர் புற்றுநோய் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை கவனிக்க ஆள் இல்லை.

ஒரு கட்டத்தில் அவர் தான் சம்பாதித்து வைத்த பணம் முழுவதையும் சிகிச்சைக்காக செலவு பண்ணி முடித்தவுடன் அவரை பார்க்க ஒருவர் கூட வரவில்லை என்பதும் ’16 வயதினிலே’ திரைப்படத்தில் அவர் பரிதாபமாக இறந்து போனது போலவே சொந்த வாழ்க்கையிலும் யாரும் அருகில் இல்லாத நேரத்தில் அனாதையாக பரிதாபமாக காலமானார்.

படக் காட்சிக்காக உண்மையிலேயே பிளாட்பாரத்தில் படுத்து நடித்த அஞ்சலி… இவ்வளவு கொடுமை அனுபவித்தாரா?

ஒரு மிகச்சிறந்த நடிகை சொந்த பந்தங்களை நம்பி தனது சொத்து அனைத்தையும் பறிகொடுத்த நிலையில் அவரை கவனிக்க ஒருவர் கூட இல்லாதது மிகப்பெரிய சோகமாக பார்க்கப்பட்டது. காந்திமதி மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...