தென்னிந்திய அளவில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இன்று வரை அது மர்ம மரணம் ஆகவே இருக்கிறது. அந்த மரணத்தை சந்தித்தவர் தான் நடிகை சௌந்தர்யா.
நடிகை சௌந்தர்யா பெங்களூரை சேர்ந்தவர். அவர் டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக எம்பிபிஎஸ் படிக்க முடிவு செய்தார். ஆனால் அவர் படிப்பை முழுவதுமாக முடிக்காமல் பாதியில் திரும்பி விட்டார்.
நடித்தது 9 படங்கள்.. 9ம் சூப்பர்ஹிட்.. திடீரென காணாமல் போன கோடீஸ்வரரின் மகன் நடிகர்..!
அப்போதுதான் அவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் வந்தது. தமிழில் 1993ஆம் ஆண்டு ’பொன்னுமணி’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அவரை அறிமுகப்படுத்தும்போது இயக்குனர் உதயகுமாருக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தது.
மனோரமா, சிவக்குமார், கார்த்திக் போன்ற சீனியர் நடிகர்களுடன் இந்த புதுமுக நடிகையால் நடிக்க முடியுமா என்ற ஐயமும் இருந்தது. ஆனால் அவரது முதல் டேக்கே கார்த்திற்க்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி என்ற நிலையில் அந்த காட்சியில் அவர் ஒரே டேக்கில் நடித்து முடித்ததை அடுத்து செட்டில் இருந்த அனைவரும் பாராட்டினர்.
குறிப்பாக இந்த பொண்ணு மிகப்பெரிய அளவில் வருவார் என்று மனோரமா மற்றும் சிவக்குமார் பாராட்டினர். அந்த பாராட்டு உண்மை என்பது அதன் பிறகு தெரிய வந்தது.
‘பொன்னுமணி’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக தெலுங்கில் அவருக்கு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகியதால் தெலுங்கில் பிஸியானார். ஒரே ஆண்டில் 10 படங்களுக்கும் மேல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
திருமணத்திற்கு பின் ஒரே ஒரு படம் தான்.. திரையுலகில் இருந்து ஷாலினி விலக இதுதான் காரணமா?
இந்த நிலையில் தான் ’அருணாச்சலம்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ’அருணாச்சலம்’ படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஆனால் ரஜினியே நேரடியாக கால் செய்து கேட்ட பொழுதுதான் சௌந்தர்யா ஒப்புக்கொண்டார்.
நடிகை சௌந்தர்யா அம்மா, அப்பா பார்த்த சொந்தக்கார பையனையே திருமணம் செய்து கொண்டார். ரகு என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தான் அவர் திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தன்னை அறிமுகப்படுத்திய உதயகுமார் மனைவியிடம் அவர் போன் செய்து பேசினார். அப்போது தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தனது தலைவர் கூறியதால் நான் மறுக்க முடியவில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு முழுவதுமாக ஓய்வு எடுக்க போகிறேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அடுத்த நாளே அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் உதயகுமார் மற்றும் அவரது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் என்பது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பல ஆண்டுகளாக தெரிந்த நிலையில் தற்போது தான் அது வெளியே தெரிந்து உள்ளது.
கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?
தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய அளவில் உச்சத்தில் இருந்தபோது அவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவர் கடைசியாக தமிழில் விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் என்ற திரைப்படத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.