பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் அந்த படத்தின் இயக்குனரால் கவரப்பட்டு நடிகை ஆனார். அதன் பின் உச்சத்திற்கு சென்ற அந்த நடிகை காதலால் தனது அனைத்து புகழையும் இழந்து திரையுலகில் இருந்து காணாமல் போனார். அந்த நடிகை தான் நடிகை மீரா ஜாஸ்மின்.
நடிகை மீரா ஜாஸ்மின் கேரளாவை சேர்ந்தவர். அவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது சொந்த ஊரில் நடந்த படப்பிடிப்பு ஒன்றை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் அவரை பார்த்து அந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்தார்.
எடை குறைப்பால் ட்ரோல் .. நெகட்டிவ் விமர்சனங்களை மீறி சாதனை செய்யும் கீர்த்தி சுரேஷ்..!
அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் அந்த படத்தை பார்த்த லிங்குசாமி தனது ’ரன்’ படத்தில் நாயகியாக்கினார். ’ரன்’ படத்தில் முதலில் நாயகியாக நடிக்க வித்யா பாலன், ரீமா சென் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரீமாசென் சில காட்சிகளில் நடிக்கவும் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து மீரா ஜாஸ்மின் அந்த படத்தின் நாயகி ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தது.
குறிப்பாக விஜய்யுடன் அவர் நடித்த புதிய கீதை என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து அஜித்தின் ’ஆஞ்சநேயா’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படமும் படுதோல்வி அடைந்தது. ஒரு நடிகை விஜய், அஜித் இருவர் உடனும் இணைந்து நடித்த இரண்டு படம் பிளாப் ஆனது அனேகமாக மீரா ஜாஸ்மினுக்கு தான் இருக்கும்.
ஆனால் அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆய்த எழுத்து’ என்ற படம் அவருக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் மீரா ஜாஸ்மின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்துகள் குவிந்தது.
இதனை அடுத்து அவர் நடித்த ’சண்டக்கோழி’ திரைப்படம் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றது. அந்த படத்தில் துருதுருவென வரும் இளம் பெண்ணாக விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது நடிப்பை கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாராட்டி போற்றியது.
நயன்தாராவை விட பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள் செய்த விஜய் பட ஹீரோயின்! கடைசியில் என்ன நடந்தது…
இந்த நிலையில் திரையுலகில் உச்சத்தில் இருந்த மீரா ஜாஸ்மினுக்கு திடீரென இசைக்கலைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. அவருடைய இசையால் மயங்கி தனது மனதை பறிகொடுத்த நிலையில் அவரும் மீரா ஜாஸ்மினை ஏற்றுக் கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதல் பிரேக்கப் ஆனது.
இந்த சோகத்தால் அவர் திரைப்படத்தில் தீவிரமாக கவனம் செலுத்தவில்லை. சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு செல்லாதது போன்ற காரணங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில்தான் மலையாள திரையுலகம் மீரா ஜாஸ்மினுக்கு தடை விதித்தது. அந்த தடையும் அவருக்கு மனதளவில் மிகப்பெரிய அளவில் சோர்வை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஒரு படப்பிடிப்பின் போது இயக்குனருடன் சேர்ந்து அவர் கோவிலுக்கு சென்றார். அவர் கோயிலுக்கு சென்றது ஆகம விதியை மீறியது என்று கூறி மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டது. அதனால் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் சினிமாவே வேண்டாம் என்று வெறுத்திருந்த நிலையில் துபாய் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கு செட்டில் ஆனார். ரசிகர்கள் அவரை கிட்டத்தட்ட மறந்து விட்டனர். ஆனால் இரண்டே ஆண்டுகளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மீண்டும் கேரளா திரும்பினார்.
தற்போது மீரா ஜாஸ்மினுக்கு 41 வயதாகி இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து மீண்டும் திரை உலகிற்கு வருவதற்கு பச்சை கொடி காட்டினார். உச்சத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது முதலில் அவர் போட்ட ஒரே நிபந்தனை கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதுதான். ஆனால் தற்போது வேறு வழி இன்று கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக ’விமானம்’ என்ற படத்தில் அவரது கேரக்டர் நல்ல மதிப்பை பெற்றது. தற்போது அவர் மாதவனுடன் 20 வருடங்களுக்கு பிறகு ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நிச்சயம் அவருக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த மோகன்.. நடிகையின் துரோகத்தால் ஜீரோவான பரிதாபம்..!
நடிகை மீரா ஜாஸ்மின் ’பாடம் ஒன்று ’என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருது பெற்றார். அதேபோல் தமிழ்நாடு அரசு விருதுகள், கேரளா அரசு விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.