அரசியலில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக வெண்ணிற ஆடை நிர்மலா என்ற நடிகையை எம்ஜிஆர் அறிமுகம் செய்த நிலையில் அந்த நடிகை திடீரென திவாலானதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான ’வெண்ணிறை ஆடை’ என்ற திரைப்படத்தில் தான் ஜெயலலிதா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். ஆனால் பின்னாளில் இருவரும் அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வார்கள் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஒரே நடிகருடன் ஜோடியாக 130 படங்கள்.. கின்னஸ் சாதனை செய்த நடிகை..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கிய பின்னர் வெண்ணிற ஆடை நிர்மலாவை தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து தமிழ்நாடு சட்ட மேலவையில் அவரை உறுப்பினராக்க விரும்பினார்.
வெண்ணிற ஆடை நிர்மலாவின் பதவி ஏற்பு விழா 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் திடீரென வெண்ணிறை ஆடை நிர்மலா திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி திவால் ஆனவர் சட்டமன்றத்தில் அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினராக முடியாது. இதனை அடுத்து வெண்ணிற ஆடை நிர்மலா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் மனமுடைந்த எம்ஜிஆர் சட்ட மேலவையை கலைக்க முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு இணையாக வந்திருக்க வேண்டிய வெண்ணிற ஆடை நிர்மலா திடீரென திவால் என்ற ஒரே ஒரு நிகழ்வு அவரது அரசியல் வாழ்க்கையை திருப்பி போட்டது
எம்ஜிஆர் மறைந்ததும் சில காலம் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த நிலையில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அப்போதுதான் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக பிளந்தது. இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தனது அணிக்காக தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
ஜெயலலிதா தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில் அவருக்கு எதிராக ஜானகி அணியின் சார்பில் போட்டியிட்டவர் தான் வெண்ணிறை ஆடை நிர்மலா. ஜெயலலிதா போடி தொகுதியில் போட்டியிட்டாலும் தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலா போடியில் மட்டும் தங்கி இருந்து முழுக்க முழுக்க பிரச்சாரம் செய்தார். அப்படி இருந்தும் அந்த தொகுதியில் ஜெயலலிதா அபார வெற்றி பெற்றார் என்பதும் வெண்ணிற ஆடை நிர்மலா படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!
ஜெயலலிதா அளவுக்கு தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்தாலும் ஜெயலலிதா அளவுக்கு அவரால் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்ய முடியவில்லை என்றும் கூறப்பட்டது.