இங்கிலாந்தைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாய் பெத் மார்டின் துருக்கியில் விடுமுறை செலுத்தும் போதே மர்மமான முறையில் ல் உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணாமல் போய்விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெத் என்ற பெண், துருக்கி சென்றபோது திடீரென உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறியிருந்தார். உணவு ஜீரணமாகாமல் இருக்கலாம் என நினைத்து இருந்தார். இஸ்தான்பூல் நகரில் ஏறத்தாழ வந்த சில மணி நேரங்களுக்குள் மயக்க நிலைக்கு சென்றதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ள சில உறுப்புகள் செயலிழப்பால் ஏற்பட்ட காரணமாக மரணம் ஏற்பட்டது என கூறினாலும், முழுமையான காரணத்தை தெரியப்படுத்தவில்லை. அவரின் கணவர் லூக் மார்டின் எழுப்பிய சில சந்தேகங்களுக்கு, துருக்கி அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் வேறு வழியின்றி தனது மனைவியின் உடலை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றபின் அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனைஆய்வில், பெத்தின் இதயம் காணாமல் போனது தெரியவந்தது. இது மருத்துவ தவறா? அல்லது மரபணு மருந்து எதிர்வினையா என சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்தான்புல் நகரில் உள்ள மர்மரா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த அனைத்தும் தவறாக கையாளப்பட்டது என குடும்பம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பெத்தின் உடலுக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக துருக்கி மறுத்தாலும், பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வாளர்கள் அதற்கு எதிரான தகவல்களை கூறியுள்ளனர்.
அவரது மரணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பம் அச்சமடைந்த நிலையில், உண்மையை அறிய முயற்சி செய்து வருகிறது.