93 மில்லியன் பார்வையாளர்களை கடந்த க்யூட் குழந்தையின் வீடியோ.. அப்படி என்ன ஸ்பெஷல் அதுல..

Published:

முன்பெல்லாம் செய்தித் தாள், வார நாளிதழ் என மூழ்கி கிடந்த மக்கள், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை கழித்து வருகின்றனர். இதனால், செய்தித் தாள்களை விட மிக வேகமாக தங்களை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்களையும் இணையவாசிகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனால், சோகமான, மகிழ்ச்சியான அல்லது வலிகள் நிறைந்த என எந்த நிகழ்வாக இருந்தாலும் உடனடியாக கவனம் பெற்று அது பற்றி பேசவும் தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு சமூக வலைத்தளத்தின் வளர்ச்சி மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியும் வருகிறது. இதில் ஒரு பக்கம் நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் பிரச்சனைகளும் நிறைய உள்ளது.

ஒரு சம்பவத்தின் உண்மைத்தன்மை என்ன என்பது கூட தெரியாமல், ஆராய்ந்து பார்க்காமல் ஒரு செய்திகளை வேகமாக வைரல் செய்து சர்ச்சையை உண்டு பண்ணும் நிகழ்வுகளும் இங்கே நிறைய அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதே தெரியாமல் யாரோ பகிரும் செய்தியை உண்மை என நினைத்து கண்மூடித்தனமாக வசைபாடி பகிர்ந்து விடுவார்கள்.

ஆனால், பின்னர் தான் உண்மை என்பது தெரிய வருவதுடன் முதலில் செய்த தவறுக்காக வருந்தவும் செய்வார்கள். இப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய பிரச்சனைகளும் உள்ளதால் அதனை பயன்படுத்துவதிலும் அதிக கவனம் வேண்டுமென பல நிபுணர்கள் எச்சரித்தும் வருகின்றனர்.

ஆனால், இப்படி பல பிரச்சனைகள் இருப்பதற்கு மத்தியில் நிறைய மனம் நெகிழ வைக்கக் கூடிய விஷயங்கள் தொடர்பான வீடியோக்களும் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று தான் வருகிறது. அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

குழந்தைகள் க்யூட்டாக எதையும் செய்யாமல் இருக்கும் வீடியோவை பார்த்தாலே ஒருவித மெய்சிலிர்ப்பு உருவாகும். அதிலும் அந்த குழந்தைகள் ஏதாவது வித்தியாசமாக செய்யும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கும். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில், mamasoli_go என்ற கணக்கில் இருந்து சுமார் 3 வயதிருக்கும் பெண் குழந்தை ஒன்று, கோழி குஞ்சுகளுடன் விளையாடுவது தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

மரியா என்ற பெண்ணின் கணக்கு என தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரது மகள் சிறப்பான பாவாடை சட்டை அணிந்தபடி கோழி குஞ்சுகளுடன் விளையாடுவதுடன் மட்டுமில்லாமல் அதனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவர் வலம் வருவதும் வீடியோவுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. அத்துடன் கோழி குஞ்சுகளை அவர் கட்டியணைத்து கொள்வதும் பார்க்க அழகாக இருக்கும் சூழலில், நெட்டிசன்கள் பலரையும் இந்த வீடியோ வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த கணக்கில் பல வீடியோக்கள் ஒரு மில்லியன் தாண்டி கவனம் பெற்று வரும் சூழலில், பல நாட்களுக்கு முன் பகிரப்பட்ட வீடியோ ஒன்று தற்போது 93 மில்லியன்களை கடந்துள்ளது அந்த விடியோவின் அழகை இன்னும் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maria Godinez (@mamasoli_go)

மேலும் உங்களுக்காக...