அந்த சத்தம்.. யூடியூபர் கண்டுபிடித்த மர்ம குகை.. ஒரு தடயம் கூட கிடைக்காம காணாமல் போன பிரபலம்.. திகிலூட்டும் பின்னணி..

Published:

மர்மம் என வந்துவிட்டாலே அந்த வார்த்தையை கேட்கும் போது கூட ஏதோ பயங்கரமான ஒரு உணர்வு தான் நமக்குள் கடத்திச் செல்லும். அதே வேளையில் இன்று நாம் உலகில் தெரியாமல் இருக்கும் பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில் சில விஷயங்கள் தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து இருப்பதையும் பலரும் மர்மமான ஒரு விஷயமாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல யூடியூபர் ஒருவர் காணாமல் போனதும் அதற்கு பின்னால் உள்ள திகிலூட்டும் காரணமும் பலரையும் குழம்ப தான் வைத்துள்ளது. 1967 ஆம் ஆண்டு லாஸ் வேகாசில் பிறந்த கென்னி வீச் என்ற யூடியூபர், சாகசம் நிறைந்த பயணங்களுக்காக கலிஃபோர்னியா உள்ளிட்ட பல பாலை வனங்களில் தனியாக சுற்றி திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பயணத்தை இன்னும் சுவாரசியப்படுத்துவதற்காக அவர் சென்ற இடங்களில் எல்லாம் மனித எலும்பு மிருகங்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்திருந்ததும் அவர் தனது வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் மோஜாவே பாலைவனத்திலும் ஒரு முறை தனியாக கென்னி வீச் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேப், ஜிபிஎஸ் உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லாமல் இந்த பயணத்தை கென்னி வீச் மேற்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், நெல்லிஸ் ஏர் போர்ஸ் அருகே ஒரு மர்மமான குகை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த குகையின் நுழைவாயில் ‘M’ என்ற எழுத்து வடிவில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதற்குள்ளே கென்னி வீச் சென்றபோது ஒரு அசவுகரியமான வைப்ரேஷனும் தனது உடலில் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அங்கே சென்றதும் ஒருவித பயமும் கென்னிக்கு உருவாக அங்கிருந்து திரும்பியும் வந்துள்ளார். இந்த குகை போல பல இடங்களில் தனியாக சாகச பயணம் மேற்கொண்டுள்ள கென்னிக்கு இந்த இடம் மிக பயமும் அதே வேளையில் மிகுந்த ஆச்சரியத்தையும் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சூழலில் தான் இந்த M எழுத்து வடிவில் இருக்கும் குகைக்கு மீண்டும் ஒருமுறை தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அந்த M வடிவில் இருக்கும் குகையைத் தேடி மீண்டும் கென்னி வீச் சென்றிருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை திரும்பவில்லை என்பதுதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கென்னி வீச்சின் காதலியும் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க அவர் பயணம் மேற்கொண்டுள்ள இடத்தை வீடியோவின் படி கண்டுபிடித்ததுடன் அவரது செல்போன் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் சில மைல் தூர இடைவெளியில் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் இன்றுவரை கென்னி வீச்சை கண்டுபிடிக்காத நிலையில் அவரது காதலி இது பற்றி கூறுகையில் அவர் சில நாட்களாக அந்த பாலைவனத்தை நினைத்து மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதன் பெயராக விபரீதம் முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையிலும் இந்த M குகையை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் கென்னியை கண்டுபிடிக்காத முடியாத விஷயம் பலரையும் ஒரு நிமிடம் மிரண்டு போது தான் வைத்துள்ளது. மேலும் ஏலியன்கள் கூட அவரை எதாவது செய்திருக்கலாம் என்ற கருத்தும் எழாமல் இல்லை.

மேலும் உங்களுக்காக...