டிரம்ப் கூறுவது எல்லாமே பொய்.. ஒரு பக்கம் அமைதி பேச்சு, இன்னொரு பக்கம் ஆயுத விற்பனை.. ஈரான் விளாசல்

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை விரும்புகிறேன் என கூறியது ஒரு பொய் என இரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமெனெயி குற்றம் சாட்டினார். அமைதி என்று…

iran

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை விரும்புகிறேன் என கூறியது ஒரு பொய் என இரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமெனெயி குற்றம் சாட்டினார்.

அமைதி என்று ஒருபக்கம் பேசிக்கொண்டே, இன்னொரு பக்கம் அமெரிக்கா 10 டன் எடை கொண்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு தருகிறது. இதில் எங்கே அமைதி உள்ளது? அந்த குண்டுகள் காசா குழந்தைகளின் மீது வீசுகிறது’ என அவர் குற்றம் சாட்டினார்.

டிரம்ப், எமிரேட்ஸில் இருந்து புறப்பட்ட பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம், “இரான் உடனே அமெரிக்காவின் அணு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும்; இல்லையெனில் மோசமான விஷயம் நடக்கும்,” என எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த காமெனெயி, டிரம்ப் அமைதி பற்றி பேசுகிறார். அதே நேரத்தில் மிகப்பெரிய படுகொலை ஆயுதங்களால் எச்சரிக்கையும் விடுகிறார். எதை நம்ப வேண்டும்? டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க மக்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் பேச்சு இது,” என்றார்.

இந்த போர்களுக்கும் எல்லாம் காரணம் இஸ்ரேல் அரசு தான் என்றும், இது ஒரு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் போன்றது என்றும், இது அவசியமாக அழிக்கப்படும்,” என கூறினார்.

நாங்கள் யுத்தம் வேண்டாம் என்று சொல்கிறோம். ஆனால் எங்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். மிரட்டல்களுக்கு பயமில்லை. அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடரும்.” என்றார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அரக்‌சி இதுகுறித்து கூறியபோது, ’டிரம்ப் கூறும் போல எந்த அணு ஒப்பந்தக் கோரிக்கையும் எங்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அணு சக்தியை அமைதி நோக்கில் பயன்படுத்துவதற்கான உரிமையை இரான் ஒருபோதும் கைவிடாது. அமெரிக்கா மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான புதிய அடிப்படை விதிகளை வகுக்கிறது. இது பேச்சுவார்த்தையை நீட்டிக்க செய்கிறது. இது ஏற்க முடியாதது என்றும் அவர் கூறினார்.