மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..

By Ajith V

Published:

பூ என கூறியதும் அதில் அழகான விஷயங்கள் நிறைய இருக்கும். அதே வேளையில் சில மர்மமான அல்லது வியப்பு கலந்த பல்வேறு நிகழ்வுகளும் உள்ளது என்பது தான் உண்மை. நம்மூரில் பழமொழிகள் பலவற்றையும் மக்கள் பரவலாக பயன்படுத்தும் சூழலில் அதில் முக்கியமாக இருப்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்த குறிஞ்சி பூ போல் என கூறுவது தான்.

குறிஞ்சி பூ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும் என்பது நிச்சயம் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இந்த நிலையில் அப்படி ஒரு ஆச்சர்யமான பூ குறித்த ஒரு தகவல் தான் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.

Ghost Orchid என்ற பெயரில் பிரிட்டன் பகுதியில் ஒரு பூ மிக அரிதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோஸ்ட் ஆர்ச்சிட் பூ எந்த பகுதியில் தென்படாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பூ அழிந்து விட்டதாக அனைவரும் கருதி வந்த நிலையில் தான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிக வியப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மிக மிக அரிதாகவே இந்த பூ வளரும் சூழலில், 1980 ஆம் ஆண்டு தென்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் 29 ஆண்டுகள் கழித்து கடந்த 2009 ஆம் ஆண்டு தென்பட்டது. அதன் பின்னர் தற்போது இங்கிலாந்தில் உள்ள காட்டு பகுதியில் இந்த பூ தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இதன் சில சுவாரஸ்ய பின்னணிகள் தொடர்பாக அதன் இருப்பிடம் எங்கே என்பதையும் ரகசியமாகவே அவர்கள் வைத்துள்ளனர்.

இந்த பூவின் குணாதிசயங்களின் படி வெளியான தகவலில் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த கோஸ்ட் ஆர்ச்சிட் பூ, வெப்பமே அதிகம் இல்லாமல் இருக்கும் காட்டுப்பகுதியில் தான் வளரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பூ இலை எதுவும் இல்லாமல் இருப்பதால் சூரிய ஒளி இல்லாமலேயே அதற்கு ஏற்றபடியான சூழ்நிலை உள்ள இடத்தில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பூவை தோண்டி எடுக்கவும் அதே நேரத்தில் கொய்யவும் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது மிக பிரம்மாண்டமான பின்னணியாகவும் உள்ளது. மேலும் இந்த கோஸ்ட் ஆர்ச்சிட் பூ பற்றி மற்றொரு வாயை பிளக்க வைக்கும் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை இந்த பூவை 6 பேர் தான் பார்த்துள்ளனர் என்பது தான்.

மிக மிக அரிதாக பூக்கும் இந்த பூ பதினைந்து ஆண்டுகள் கழித்து தற்போது தென்பட்டுள்ளது, நிச்சயம் தாவரவியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாக மாறும் என்றே தெரிகிறது. மேலும் இந்த பூவை ஒரு தாவரவியல் ஆய்வாளர் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்னர் கண்டுபிடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...