இன்றைய உலகத்தில் வினோதமான செயல்கள் பல நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் அனைவரும் கவனத்தை ஈர்க்கவும் வைரலாகவும் ட்ரெண்ட் ஆகவும் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில திறமையானவர்கள் தங்களது தனிதிறமையை காட்டுவார்கள். அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒரு சிலர் கோமாளித்தனமாக பலவற்றை செய்வார்கள். ஒரு சிலது உலகத்தில் எதற்காக நடக்கிறது என்பதே தெரியாது. அது போல ஒரு சம்பவம் தற்போது நடந்து இருக்கிறது.
சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் புலியின் சிறுநீரை மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்திய மதிப்பின்படி இந்த ஒரு பாட்டில் புலியின் சிறுநீரானது 250ML ரூபாய் 600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த புலியின் சிறுநீரை ஒயிட் வயனில் கலந்து குடிக்கலாம் அல்லது உங்களுக்கு மூட்டு வலி இருக்கும் இடத்தில் இஞ்சி உடன் சேர்த்து அதையும் அரைத்து பூசினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஆனால் இதை ஆய்வு செய்த அந்நாட்டு மருத்துவர்களும் வெளிநாட்டு மருத்துவரும் இதில் உண்மைத் தன்மை முற்றிலும் கிடையாது புலியின் சிறுநீரில் எந்த மருத்துவமும் குணமும் கிடையாது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் எதற்காக அவர்கள் புலியின் சிறுநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார்கள் என்பது இதுவரையிலும் தெரியவில்லை.