அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் தொடங்கி, கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது 145% வரியை விதித்த நிலையில் அதனை தற்போது 245% ஆக உயர்த்தியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது 145 சதவீத மரியாதையை ட்ரம்ப் விதித்த சில நிமிடங்களில், சீனா அமெரிக்க பொருட்களின் மீதான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது.
மேலும், “அமெரிக்காவுடன் வர்த்தக போரை பார்த்து நாங்கள் பயப்படவில்லை,” என்றும் கூறிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினால், அமெரிக்கா முதலில் தனது அழுத்தத்தையும் அச்சுறுத்தலையும் நிறுத்த வேண்டும் என்றும், சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை இருந்தால்தான் சீனா பேச்சுவார்த்தைக்கு வரும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், சீனாவுக்கு கொடுத்த கேடு முடிவடைந்ததை அடுத்து, தற்போது சீன பொருட்கள் மீதான வரியை 245% ஆக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இப்போதுதான் இந்திய பங்குச் சந்தை உள்பட அனைத்து பங்குச் சந்தைகளும் ஓரளவு உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வர்த்தக போரை மீண்டும் சிக்கலாக்கி உள்ளது.