ஏப்ரல் 6ஆம் தேதி சிகிச்சை பெறும் போது வென்டிலேட்டரில் இருந்தேன். பேச முடியாத நிலை. மிகுந்த பயத்தில் இருந்தேன். அப்போது மருத்துவமனையில் சிலர் என்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர். அந்த நேரத்தில் நான் நினைவிழந்து இருந்தபோதிலும் பாலியல் பலாத்காரத்தை என்னால் உணர முடிந்தது. மேலும் என் அருகில் இரு நர்ஸ்கள் இருந்தார்கள், அவர்கள் முன்னிலையில் தான் இந்த கொடுமை நடந்தது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஒரு நோயாளி சார்பில் ஒரு புகார் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம். தற்போது வரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலப்பகுதிக்கான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தற்போதைய நிலைப்படி, மருத்துவமனையின் சில ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்ற என்றும் அவர்கள் தெரிவித்தனர்.